மண்ணைச் செறிவூட்ட சிறந்த கலப்பை……

மண்ணைச் செறிவூட்ட சிறந்த கலப்பை உளிக்கலப்பை

உளிக்கலப்பைக் கொண்டு ஆழ உழவு செய்தல் விளைச்சலை அதிகப்படுத்த அத்தியாவசியமான உத்தி ஆகும். மானாவாரி பயிர்கள் இதனால் அதிக பலனை அடைகின்றன.

இப்படி செய்வதால் கடினமான அடிமண் தகர்க்கப்பட்டது,மண்ணின் நீர் உறிஞ்சும் தன்மையும்,நீர் சேமிப்புத்திறனும் அதிகரிக்கின்றன. அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட நிலத்தின் அடிப்பகுதியில் பயிர்களின் வேர் படர்ந்து வளர உதவுகிறது.

எனவே பயிர்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும்,விளைச்சலும் அதிகப்படுத்தப்படுகின்றன. விரிவான ஆராய்ச்சிகளின் பயனாக குறைந்த இழுவிசை மாற்று அதிக செயல் திறன் கொண்ட உளிக்கலப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கலப்பை 3 மி.மீ தகட்டினால் ஆனா நீள் சதுர இரும்பு குழல்களால் ஆன சட்டத்தைக் கொண்டுள்ளது. சட்டம் மிக நவீன உத்திகளுடன் கம்ப்யூட்டரின் தேவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பையை கொண்டு 40 செ.மீ.வரை ஆழ உழவு செய்யலாம்.

இக்கலப்பையை 35 முதல் 45 குதிரை திறன் கொண்ட டிராக்டரால் எளிதாக இயக்கலாம். இந்த உளிக்கலப்பையாக கொண்டு உழவு செய்தால் எக்டருக்கு ரூ.265 செலவு ஆகும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories