மண்ணை வளப்படுத்தும் நுண்ணுயிர் கரைசல்

 

 

காற்றில்லாத சூழ்நிலையில் வளரும் நுண்ணுயிரிகளை ஆங்கிலத்தில் அனரோபி எனக் குறிப்பிடுவார்கள்.

இது போன்ற ஒரு காற்று இல்லாத சூழ்நிலையை செயற்கையாக உருவாக்கி அதில் பாக்டீரியா என்ற நுண்ணுயிரிகளை வளரச் செய்து மண்ணுக்கு கொடுக்கலாம்.

இதற்கு தொல்லுயிர் கரைசல் முறையில் நுண்ணுயிரிகளை உருவாக்க முடியும்.

தயாரிப்பு

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டிரம்மில் எடுத்துக்கொள்ளவேண்டும் .அதில் புதிய மாட்டுச் சாணம் 5 கிலோ ,நாட்டு சர்க்கரை முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் ,அதிமதுரப் பொடி 25 கிராம் என்ற அளவில் போட வேண்டும்.
பிறகு 45 லிட்டர் அளவுக்கு தண்ணீரை எடுத்து இந்த பிளாஸ்டிக் டிரம்மில் நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு அதை இறுக காற்று புகாமல் மூடி விட வேண்டும்.
பத்து நாட்கள் வரை இதனை இவ்வாறு இழுத்து மூடி வைக்கும் போது இதில் மீத்தேன் வாயு உருவாகி இருக்கும் .10 நாளில் முடியை லேசாக திறந்து விட்டால் வாய்வு வெளியேறும் இந்த நிலையில் கேனில் உள்ள கலவையில் காற்றில்லாத சூழ்நிலை இருந்ததால் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகி இருக்கும். இதுவே சத்து ஊட்டம்உள்ள உர கலவை ஆகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories