மண்வளத்தை மேம்படுத்த

மண்வளத்தை மேம்படுத்த
நம் முன்னோர்கள் இயற்கை உரங்களையே அதிகமாக பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த விவசாயத்தை செய்து வந்தனர். இதனால் மண் வளம் பாதுகாக்கப்பட்டு மகசூலும் அதிகமாக கிடைத்தது.
1968 ல் ஏற்பட்ட பசுமைப்புரட்சியில் இந்த நிலமை மாறுபட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்க எண்ணி விவசாய அலுவலர்கள் உரத்தை பற்றி அறிமுகம் செய்தனர். ஆனால் விவசாயிகள் அவற்றை போட விரும்பவில்லை விவசாயின் அனுமதி இல்லாமலே அவர்களுடைய வயலில் இரவு நேரங்களில் சென்று உரத்தை விதைத்துவிட்டு வந்தனர் இவ்வாறு விதைத்துவிட்டதால் மகசூல் அதிகம் கிடைத்தது.
பிறகு இந்த உரம் போட்ட கதையை விவசாயிகளுக்கு சொல்ல அவர்கள் மற்ற விவசாயிகளிடமும் சொல்லி அப்படியே உரம் போட ஆரம்பித்துள்ளனர்.
இப்பொழுது அதிகம் இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துகிறார்கள் இதன் பயனாக மண்ணின் வளம் குறைந்துவிட்டது மனிதர்களுக்கும் நோய்வர ஆரம்பித்தது இவற்றை போக்க திரும்பவும் இயற்கை விவசாயத்தையே விரும்பி மண்புழு உரம் தொழுவுரம் போட ஆரம்பித்துள்ளனர்.
நாம் உரங்களை அதிகமாக போட்டால் கூடுதல் மகசூல் கொடுக்கும் என்ற எண்ணத்தில் உரங்களை அதிகமாக போடுகிறோம். அவற்றை குறைக்க நம்முடைய மண் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி சிந்தித்து நமது உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவரிடம் செல்வது போல நமது மண்ணை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
மண் பரிசோதனை
மண் பரிசோதனை செய்ய வேண்டிய வயலில் கீழ்க்கண்ட இடங்களில் மண் மாதிரி எடுக்ககூடாது.
எருக்குழி
கால்நடைகள் கட்டிய இடம்
வரப்பு ஓரம்
மர நிழலடி
இலைசருகுகள் கிடந்த இடம் (மக்கியது, மக்காத இலைகள்)
ஓடைகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள்.
மண் பரிசோதனைக்கு மண் எடுக்கக் கூடிய
இடங்கள்
மண் பரிசோதனைக்கு மண் எடுக்கக் கூடிய இடங்களை தேர்வு செய்து மேல் மண்ணை நீக்கி விட்டு அதன்பிறகு V வடிவத்தில் மண் வெட்டியால் வெட்டி, மிகவும் இருகலாக இருந்தால் கடப்பாறை கொண்டு ஒரு அடி ஆழம் வெட்டிய பிறகு இந்த மண்ணை அப்புறப்படுத்திவிட்டு பிறகு இரும்பு சம்மந்தப்பட்ட எந்த ஒரு பொருளைக்கொண்டும் மண்சேகரிக்க கூடாது. கல் அல்லது குச்சியின் மூலம் வெட்டிய குழியில் எல்லா பகுதியிலும் சுரண்டி அரைக்கிலோ அளவிற்கு மண்ணை சேகரிக்க வேண்டும்.
இதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 அல்லது 5இடங்களில் மண் மாதிரி எடுத்து அனைத்தையும் ஒன்றாக கொட்டி நன்கு கலக்கி வட்ட வடிவமாக பரப்பி அதன்மீது X குறியிட்டு எதிர் எதிர் பாகத்தை நீக்கி விடவேண்டும். இதேபோல் மூன்று முறை பிரிக்கனும் இறுதியில் அரை கிலோ மண் இருக்கும் அவற்றை ஒரு பையில் போட்டு விவசாயின் பெயர், சர்வே எண், முன்பு சாகுபடி செய்த பயிரின் பெயர், அடுத்து சாகுபடி செய்யப்போகும் பயிரின் பெயர் முதலியவற்றை ஒரு பேப்பரில் எழுதி மண் ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவர்கள் நம்முடைய மண்ணை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதை கீழ்கண்ட நிலைகளில் மண்வள அட்டையில் குறிப்பிடுவார்கள் .
மண்ணில் நிலைகள் 4
பி.எச்.5 களர்உவர் நிலம்
பி.எச் 6.5 கீழே இருந்தாள் அமிலநிலம்
பி.எச் 6.5 முதல் 7.5 நடுநிலமை – நல்ல மண்
பி.எச் 7.9 க்கும் மேலே இருந்தால் கார நிலம்
நாம் அதன்படி சரியான விகிதத்தில் இயற்கை எரு, பசுந்தாள் உரங்கள் போட்டு நிவர்த்தி செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories