மண் அரிமானத்தை தடுக்கும் முறைகளை
அன்புள்ள விவசாயிகளே தற்பொழுது அனேக இடங்களில் மிதமான முதல் அதிக மழை பெய்து வருகிறது. இந்த மழைநீரை வீனாக்கமலும் நம் வயலினுடைய தண்ணீர் அடுத்த நிலத்திற்கு செல்லாமல் தடுப்புமுறைகளை பயன்படுத்தியும் குறுக்காகவும் தடுப்பு கரைகள் அமைத்து மண்ணை பாதுகாப்பது மிகவம் அவசியம். மழை மற்றும் காற்றினால் மண் அரிமானம் அதிகம் ஏற்படும்.
முக்கியமான மண் வளப் பாதுகாப்பு முறைகளானவை சரிவுக்கு குறுக்காக உழுதல் மற்றும் விதைத்தல், அதிக பரப்புடைய நிலங்களை சிறு சிறு பாத்திகளாக பிரித்து பயன்படுத்துதல், மரப்பயிர்களை வேலியோரம் நட்டு காற்றுத்தடைகளை உருவாக்குதல், சம உயர வரப்புகளை அமைத்து வருடாவருடம் அவற்றை மேம்படுத்துதல் போன்றவை நாம் எளிதில் பின்பற்றக் கூடிய எளிய முறைகள் ஆகும்