மண் பரிசோதனை ஏன் அவசியம் தெரியுமா?

மண்ணில் உள்ள தழை, உவர்சத்துக்களின் அளவை அறிந்துகொள்ளவும், பயிர்களுக்குத் தேவையான உரத்தின் அளவைத் தெரிந்துகொள்ளவும், மண் பரிசோதனை அவசியமாகிறது என்றார்.

பிற காரணங்கள்(Other Reasons)
மண்ணில் உள்ள களர், அமில சாம்பல் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து அதற்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்ய

தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவை மிச்சமாக்க.

இடும் உரம் பயிருக்கு முழுமையாக கிடைத்திட

உரச்செலவைக் குறைத்து அதின மகசூல் பெற்றிட

அங்ககச் சத்தின் அளவு அறிந்து நிலத்தின் நிலையான

வளத்தைப் பெருக்கிட

மண்ணின் தன்மைக்கேற்பபயிரைத் தேர்ந்தெடுக்க

மாதிரி சேகரிப்பது எப்படி?
ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

மண்ணின் வளமும் தன்மையும் ஒரே வயலில் கூட இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதால், ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது.

ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து அரை கிலோ, மண் மாதிரி எடுக்க வேண்டும்

மண் மாதிரி எடுக்கும் சமயம் எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மர நிழல் மற்றும் நீர் கசிவு உள்ள இடங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றார்.

மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல் மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.

ஆங்கில எழுத்து வி வடிவக் குழியை, குறிப்பிட்ட இடத்திலுள்ள ஆழத்திற்கு வெட்ட வேண்டும்.

குழியின் இருபக்கங்களிலும் மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக அரை அங்குலத்தில் செதுக்க வேண்டும்.

வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ (அ) சாக்கிலோ போட வேண்டும்.

காய்ந்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண் கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்டு ஆழத்திற்கு செதுக்கி எடுக்கவும்

வி வடிவ குழியின் ஆழம் பயிருக்கு பயிர் மாறுபடும்

நெல், கேழ்வரகு, கம்பு, வேர்கடலை – மேலிருந்து 15 செ.மீ ஆழம்

பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி – மேலிருந்து 22.5 செ.மீ ஆழம்

தென்னை , மா மற்றும் பழத் தோட்ட பயிர்களுக்கு – மூன்று மாதிரிகள் 30, 60, 90 செ.மீ ஆழம்

களர், உவர் சுண்ணாம்பு தன்மை உள்ள நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் 1 மண் மாதிரி வீதம் 3 அடி ஆழத்திற்கு 3 மாதிரி எடுக்கவும்.

வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும்.

சுத்தமான தரையில் அ) காகித விரிப்பில் மண்ணை சீராகப் பரப்பி நான்கு சமபாகங்களாகப் பிரிக்கவும்.

பின்னர் எதிர் எதிர் மூலையில் இருபாகங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும்.

மீண்டும் மண்ணை பரப்பி முன்பு செய்தது போல் நான்கு சம பாகங்களாக பிரித்து வேறு எதிர் எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கி விடவும்.

பின்னர் அதை மண் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories