அங்கக உரங்கள் இடும்போது நிலத்தில் கடைசி உழவுக்கு முன்னதாக தொழுவுரத்தைக் எக்டருக்கு 12 டன் இடவேண்டும். களிமண் நிலங்களில் தொழு உரத்தை நடவு சா ல்களில் இட்டு நன்கு கலந்து விடவும்.
மண் பரிசோதனை செய்து உரமிடுவதால் செய்யப்படவில்லை என்றால்பொது பரிந்துரையாக வைப்பதற்கு 300:100: 200 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். துத்தநாக சத்து, கந்தக மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ள நிலங்களில் இந்த உரத்தை இட வேண்டும்.இவ்வாறு கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் நிலத்தை தயார் படுத்துவதில் சரியான தொழில்நுட்ப முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.