மண் வளம் காக்க

மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை

மண் வளம் காக்க நீங்கள் செய்ய வேண்டியவை
பசுந்தாள் உரப் பயிர்கள்
சணப்பை பயிரிடுவது குறித்து:
சணப்பை இடும் முறைகள்:
மண் வளம் மேம்பட பலபயிர் விதைப்பு
உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது :
வளமான மண்ணின்  அடையாளம்
பலபயிர் வளர்ப்பு :
மண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :

மண்வளம் காக்க என்ன செய்யணும் : உழவர்கள் தங்களது நிலத்தின் மண் வளத்தைப் பாதுகாத்து அதிக விளைச்சல் பெற பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.

ஒவ்வொரு முறை அறுவடைக்குப் பின்னரும் மண்ணின் வளத்தைக் காக்கவும், மண்ணுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பசுந்தாள் உரங்களை இட வேண்டும்.

பசுந்தாள் உரத்தை நடவு செய்து 40 முதல் 45 நாள்களுக்குப் பின்னர் அதை உழவு செய்து மீண்டும் நமக்குத் தேவையான பயிரை இட வேண்டும்.

பசுந்தாள் உரப் பயிர்கள்

பசுந்தாள் உரப் (உயிர் பயிர்கள்) பட்டியலில் தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி, கொளிஞ்சி, நரிப்பயிறு, கிளைரிசிடியா உள்ளிட்ட பயிர்கள் உள்ளன.

சணப்பை பயிரிடுவது குறித்து:

பயிர்களுக்கு உயிர் உரம் இடுவதில் முக்கியமானது சணப்பை. இந்தப் பயிர்கள் வேகமாக வளரக் கூடிய தழை, நார்ப்பயிர்.
தீவனப் பயிராகவும் வளர்க்கலாம்.
நெல், கரும்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு சணப்பை ஏற்ற பசுந்தாள் உரமாகும்.

சணப்பை இடும் முறைகள்:

அனைத்துப் பருவங்களிலும் விதைக்கலாம். மார்ச்- ஏப்ரல் மாதத்தில் விதை உற்பத்தி செய்யலாம். வண்டல் மண்ணுக்கு ஏற்றது. அனைத்து வகை மண்ணிலும் விதைக்கலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ முதல் 35 கிலோ வரை பயிரிடலாம். விதை நேர்த்தி அவசியமில்லை. இடைவெளி 45 ல 20 சென்டி மீட்டர் என்ற அளவில் இட வேண்டும்.
இதற்கு உரங்களும் இடத் தேவையில்லை. பயிர் பாதுகாப்பு அவசியமும் இல்லை. 30 நாள்களுக்கு ஒரு முறை நீர்ப் பாசனம் செய்தால் போதுமானது.

45 நாள் முதல் 60 நாள்களுக்குள் அறுவடை செய்து மண்ணில் மக்க வைத்து உழவு செய்ய
வேண்டும் அல்லது நன்றாக பூத்துக்குளிங்கும் நிலையில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு அறுவடைக்கும் பசுந்தாள் உரங்களை முறையாக இட்டு பயிரிட்டால் விவசாயிகளான நாம் முழு பலன்களை அடையாலாம்.

மண் வளம் மேம்பட பலபயிர் விதைப்பு

மண் வளம் மேம்பட ஒரு சிறந்த இயற்கை முறை பலபயிர் விதைப்பு ஆகும்.
நமது பூமியின் வயது ஏறத்தாழ 460 கோடி ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான். ஒரு செல் உயிரி தோன்றியிருக்கிறது. மனிதர்கள் தோன்றி 4.5 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. நாம் ஏர் கட்டி விவசாயம் செய்ததெல்லாம் ஆறாயிரம் ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னரும் இயற்கை செழிப்பாக இருந்திருக்கிறது. அந்தக் காலங்களிலும், இப்போது நிலத்தை இடைவிடாமல் உழுது கொண்டிருப்பவை மண்ணிலுள்ள உயிரினங்களே.

உயிருள்ள மண் 3 தன்மைகளை கொண்டது :

1. இயற்பியல்  தன்மை
(எ.கா. பொலபொலப்புத் தன்மை)

2. உயிரியல் தன்மை
(எ.கா. நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் இருப்பது)

3. இரசாயனத் தன்மை
(எ.கா.ஊட்டச்சத்துகள் கொண்டிருப்பது)

இரசாயன உப்புகள் (உரம்) கடந்த 40 ஆண்டுகளாக இட்டதால் நிலம் முதலில் உயிரியல் தன்மையை இழந்தது. பின் இரசாயனத் தன்மையையும் இறுதியில் இயற்பியல் தன்மையும் இழந்து விட்டது.

கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்த மண்ணின் உயிரோட்டம் 40 ஆண்டுகளில் அழிக்கப்பட்டு மண் மலாடாக்கப்பட்டு விட்டது.

நம் விளை நிலத்து மண்ணில் மீண்டும் உயிரோட்டம் ஏற்படுத்த வேண்டும். நுண்ணுயிரிகளை வளரச் செய்ய வேண்டும்.

மண்புழுக்களும், பிற மண்ணுயிர்களும் வாழும் வகையில் மண்ணை சரி செய்ய வேண்டும். இது நடக்கும் போது மென்மையான வேர் நுனி எளிதில் மண்ணுள் இறங்கும் வண்ணம் பொலப்பொலப்பானதாக மாறும்.

வளமான மண்ணின்  அடையாளம்

வேர் சுவாசிக்கத் தேவையான காற்று மண் துகள்களில் சிறிய துளைகளில் தங்கும். வேர் உறிஞ்ச தேவைப்படும் ஈரம் பெருந்துளைகளில் இருக்கும். ஈரமும் காற்றும் சம அளவில் அருகருகே இருக்கும். அரிய நிலையை மண் அடைந்தால் தான் மண் வளமானதற்கு அடையாளம், நலமானதற்கு அறிகுறி. அதற்குத் தாவரக் கழிவுகளையும், விலங்குக் கழிவுகளையும் மண்ணில் சேர்க்க வேண்டும்.

கெட்டுப்போன நிலத்தைப் பண்படுத்துவதற்கு நீண்டகாலம் ஆகும் என்பது பழைய நிலை. இப்போது கலவை எரு, மண்புழு எரு, உர உயிரிகள், பலபயிர் வளர்ப்பு, அமுதக் கரைசல் ஆகிய உத்திகள் மூலம் மண்ணை ஒரு வருட காலத்திற்குள், இழப்புகள் இன்றி செய்ய முடியும் என்று நம் தமிழகத்து விவசாயிகள் செய்து காட்டியுள்ளனர்.
வளமான, ஆரோக்கியமான மண்ணே வளமையான வேளாண்மைக்கு அடித்தளமாகும்.

பலபயிர் வளர்ப்பு :

பல பயிர் விதைப்பு என்பது தானியங்கள், பயறு வகைகள், பசுந்தாள் உரச்செடிகள், எண்ணெய் வித்துக்கள், வாசனைப் பியர்கள் ஆகிய ஐந்து வகை பயிர்களை வகைக்கு 4 வீதம் கலந்து விதைத்து 60-70 நாட்கள் வளர்த்து மடக்கி உழுது மண்ணில் சேர்க்கும் முறையாகும்.

இப்பயிர்களின் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள பல வகை நுண் ஊட்டங்களில் மண்ணில் சேர்ந்து மண்ணை வளம் செய்வதுடன் இவைகளே மக்கி எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன.

 

தானியப்பயிர் :
சோளம் :- 1 கிலோ
கம்பு :- 1/2 கிலோ
தினை :- 1/4 கிலோ
சாமை :- 1/4 கிலோ

பயிறு வகை :
உளுந்து :- 1 கிலோ
பாசிப்பயறு :- 1 கிலோ
தட்டைப்பயிறு :- 1 கிலோ
கொண்டைக்கடலை :-1 கிலோ

பசுந்தாள் பயிர்கள் :
தக்கை பூண்டு :- 2 கிலோ
சணப்பை :- 2 கிலோ
நரிப்பயறு :- 1/2 கிலோ
கொள்ளு :- 1 கிலோ

மணப்பயிர்கள் :
கடுகு :-1/2 கிலோ
வெந்தயம் :-1/4 கிலோ
சீரகம் :-1/4 கிலோ
கொத்தமல்லி :- 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.
இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு உண்டானது.

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள் :

*கரிசல் மண் :*
புளி, புங்கன், நாவல், நெல்லி, சவுக்கு, வேம்பு, வாகை.

*வண்டல் மண் :*
தேக்கு, மூங்கில், வேம்பு, கருவேல், சவுண்டல், புளி.

*களர்மண் :*
குடை வேல், வேம்பு, புளி, பூவரசு, வாகை.

*உவர் மண் :*
சவுக்கு, புண்கள், இலவம், புளி, வேம்பு.

*அமில நிலம் :*
குமிழ், சில்வர் ஒக்.

*சதுப்பு நிலம், ஈரம் அதிகம் உள்ள நிலம் :*
பெரு மூங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன்.

*வறண்ட மண் :*
ஆயிலை, பனை, வேம்பு, குடைவேல், செஞ்சந்தனம்.

*களிமண் :*
வாகை, புளி, வேம்பு, புங்கன், சுபாபுல், நெல்லி, கரிமருது, கருவேல்.

*சுண்ணாம்பு படிவம் உள்ள மண் :*
வேம்பு, புங்கன், புளி, வெள்வேள் சுபாபுல்.

*குறைந்த அழமான மண் :*
ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி, பனை.

வேளாண்மை நிலத்தில் குறைந்த பட்சம் 30% சதவிகிதம் மர வகைகள் இருப்பது சிறந்தது. மண் வளத்தை மேம்படுத்தவும், மழை பெறுவதற்கான தட்பவெட்ப நிலையை நிலை நிறுத்தவும் இது அவசியமாகிறது.

*மரம் வளர்ப்போம், வளம் பெறுவோம்…*

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories