பொதுவாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலத்தில் உள்ள மண் வளம் குறைந்த மண்ணாக இருந்தால் குளத்து வண்டல் மண் இடுவது சிறந்தது என பலர் கூற நாம் கேட்டிருப்போம் அது எப்படி என யோசித்தது உண்டா.உங்களின் இந்த கேள்விக்கான பதிலை விரைவாக மற்றும் தெளிவாக இங்குபார்ப்போம்.
எப்படி பயன்படுத்துவது
மணற்பாங்கான நிலங்களில் ஏக்கருக்கு 50 முதல் 100 டன் வண்டலை இடவேண்டும் .இவ்வாறு இடுவதன் மூலம் மண்ணின் அடர்த்தி குறைந்து மண்ணின் நீர் பிடிப்புத் திறன் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் உயர்வதோடு, மண்ணில் உள்ள அங்கக கரிமச் சத்து 0.23 சதவீதத்திலிருந்து 0.9 2 சதவீதம் அதிகரிக்கிறது.
எனவே விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் குளத்து வண்டல் மண்ணைப் பயன்படுத்தி நிறத்தில் தோன்றும் பௌதிக இரசாயன மற்றும் உயிரியல் இடர்களை சரி செய்து நிலைத்த மண் வளத்தை பெறலாம்.