வாழை சாகுபடிக்கு ஏற்ற மண் வகைகள் மற்றும் நிலத்தை தயார்படுத்தும் உத்தி….

ஏற்ற மண்:

வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால் தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப் பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை மண்வகைகள் மிகவும் நல்லது.

நிலத்தை தயார்ப்படுத்துதல்: 1.. நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும். நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

2.. செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.

3.. தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30gm DAP 10gm, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg ஆகியவற்றை இட்டு பின்பு வாழை நடவு செய்யலாம்..

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories