சாகுபடி நிலங்களில் மேற்பரப்பிலுள்ள வளமான மண் காற்று வேகமாக வீசும் போது தூ சி போல கிளம்பி அந்த இடத்தை விட்டு நகர்த்தபடுவதால் நிலத்தின் மண் சத்து அற்றதாக மாறுகிறது.

காற்று ஏற்படும் மண் அரிமானத்தை தடுத்து வளமான மண்ணை நிலத்தில் தக்க வைக்கும் போது மட்டுமே பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம்.

இஞ்சியை எந்த மாதத்தில் சாகுபடி செய்யலாம்?

இஞ்சியை மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் மானாவாரியாக இறவைப் பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் சாகுபடி செய்யலாம்.

சமையலுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும் சுக்கு தயாரிக்க பொதுவாகவே 245 முதல் 260 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்( இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் போது(.

அசோலாவில் உள்ள சத்து பொருட்கள் யாவை?

அசோலாவில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் கால்நடைகளுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்கள் விட்டமின் ஏ விட்டமின் பி 12 தாதுப்பொருட்கள் கல்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் இரும்பு தாமிரம் மெக்னீசியம் ஆகியவற்றை அடங்கியுள்ளன.

மேலும் அசோலாவில் 90% நீர்ச்சத்தும் 25 முதல் 30 சதவீதம் புரதச்சத்தும் 15 முதல் 16 சதவீதம் நார்ச் சத்தும் உள்ளன.

எள்ளை எப்படி பாத்திகளில் விதைப்பது ?

10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து ஏக்கருக்கு 6 கிலோ விதையும் ஒன்றரை கிலோவும் மிருதுவான மணலை கலந்து பாத்திகளில் இல்லை தூவ வேண்டும்.

காற்றடிக்கும் போது எள் விதைப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இப்படி விதைத்தால் மொத்த எள்ளும் ஒரே இடத்தில் போய் விழுந்துவிடும்.

கொண்டைக்கடலையை கால்நடைகளுக்குத் தீவனமாக கொடுக்கலாம்?

கொண்டைக்கடலையில் 21 சதம் புரதமும் 62% மாவுசத்து 5 சதம் கொழுப்புச்சத்தும் இரும்பு கால்சியம் போன்ற தாது உப்புக்களும் நியாசின் உயிர் சத்தும் அடங்கியுள்ளன. இதை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories