மண் வளத்தைப் பாதுகாக்க – பயிர் சுழற்சி

மண் வளத்தைப் பாதுகாக்க – பயிர் சுழற்சி

1.பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.
2.சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
3.அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல்
4.தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம்.
5.நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள்

 

 

 

 

 

 

6.பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்பியர், கரும்பு – நிலக்கடலை, தட்டைப்பயிறு
வேளாண் / காய்கறிகளை பயிர்களுக்குப் பின் தீவனப் பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: சோளம் + தட்டைப் பயிறு – கோதுமை / உருளைக் கிழங்கு / முட்டைக்கோஸ் / வெங்காயம்
7.சில விதைத் தாவரங்களைத் தொடர்ந்து தண்டு அல்லது வேர்த் தாவரங்களை ஊன்றலாம்.
மறுதாம்புப் பயிர்களுக்குப் பின் ஆழமான வேர்கள் செல்லக்கூடிய பயிர்களைப் பயிர் செய்யலாம்.
8.சுத்தப்படுத்தும் பயிர்களைத் தொடர்ந்து நாற்றங்கால் பயிர்களை நடலாம். எ.கா: உருளைக் கிழங்கு / கொலகேசியா / மஞ்சள் / பீட்ரூட் / கேரட் – நெல் நாற்றாங்கால் / வெங்காய நாற்றாங்கால் / புகையிலை நாற்றாங்கால் / காய்கறிப் பயிர்களின் நாற்றாங்கால்
ஆழமான வேர்களைத் தொடர்ந்து, மேலோட்டமான வேருள்ள பயிர்களை விதைக்கலாம். எ.கா: பருத்தி / ஆமணக்கு / துவரம் பருப்பு – உருளைக் கிழங்கு / லெண்டில் / பச்சைப் பயிறு
9.அதிக ஆழமான உழவு தேவைப்படும் பயிர்களை கோடை உழவு முடிந்த உடன் பயிரிட்டுவிட்டு அதன்பின்பு சற்று இறுகிய மண்ணிலும் வளரக்கூடிய தாவரங்களை வளர்க்கலாம். எ.கா: உருளைக் கிழங்கு / முள்ளங்கி / சர்க்கரை வள்ளிக் கிழங்கு / கரும்பு – உளுந்து / பச்சைப் பயிறு / பசுந்தாள் உரப் பயிர்கள்
10.ஒருவிதையிலைத் தாவரங்களைத் தொடர்ந்து இருவிதையிலைத் தாவரங்கள் பயிரிட வேண்டும். எ.கா: உருளைக் கிழங்கு / கடுகு / நிலக்கடலை / பயிறு வகைகள் – நெல் / கோதுமை / கரும்பு / கம்பு அல்லது இவற்றை கலந்தும் விதைக்கலாம்.

 

 

 

 

 

11.சில பயிர்கள் கெட்ட வாடையை வெளிப்படுத்தும். சாதாரண பயிர்களைப் பயிரிட்ட பின் இப்பயிர்களைப் பயிரிட்டால் சில வகைப் பூச்சித் தாக்குதலில் இருந்து அவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
12.ஊடுபயிரல்லாத தனிப்பயிர் செய்தபின் அதிகம் அரிதாள் கட்டை விடும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: கரும்பு / வெள்ளைச் சோளம் / பருத்தி / அவரை – தீவனப் பயிர்கள்
13.சில வறட்சி தாவரங்களைத் தொடர்ந்து ஈரப்பதம் விரும்பும் பயிர்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நெல் – கொண்டைக் கடலை
14.சில பூச்சிகள் குறிப்பிட்ட பயிர்களைத் தாக்கும் ஆற்றல் வாய்ந்தவை. எனவே அவ்வகைப் பயிர்களை பயிரிட்ட பின் அடுத்தமுறை வேறு குடும்பத்தைச் சார்ந்த பயிர்களைப் பயிரிடலாம். எ.கா: கரும்பு – துலுக்க மல்லி போன்றவை நூற்புழுவால் பாதிக்கப்படும். தக்காளி / கத்தரி / புகையிலை / உருளைக் கிழங்கு – நெல் / 15.பயிறுவகை போன்றவை ஒரபஞ்சித் தாவரத்திற்கும், கம்பு – ஆமணக்கு போன்றவை ஸ்டிரைகாவிற்கும், பெர்ஸிம் – ஓட்ஸ் போன்றவை கஸ்குட்டாவிற்கும் பயிர்செய்யப்படுகின்றன.

 

 

 

16.சில பயிர்களில் ஒரு குறிப்பிட்ட வகைக்களைச் செடிகள் தொடர்ந்து முளைத்துக் கொண்டே இருக்கும். இப்பிரச்சினையைத் தடுக்க சுத்தப்படுத்தும் முன் பயிரிலிருந்து வேறுபட்ட ஒரு பயிரைப் பயிரிட வேண்டும். எ.கா: கோதுமை – நெல் (பைலாரிஸ் மைனர் எனும் களைச் செடி) பெர்ஸீம் – உருளைக் கிழங்கு / போரோ அரிசியில் சிகோரியம் இன்டைபஸ் என்ற களை, கடுகு, முன்பருவ உருளைக் கிழங்கு – கிலியம் விஸ்கோஸ், அரிசி – சணல் / கரும்பு / காய்கறிகள் / மக்காச்சோளம் + அவரை போன்றவற்றில் எக்கினோகுளோவா கிரஸ்கல்லி, சணல் – காய்கறிகள் கார்கோரஸ் அக்குடன் குலஸ்.
17.மேய்ச்சல் பயிர்களுக்குப் பின் தீவனம் அல்லது வேறு ஏதேனும் விதைப்பயிர்களை விதைக்கலாம். எ.கா: பாரா புல் – சோளம் + அவரை / நெல்.
18.சுத்தப்படுத்தும் தாவரங்களுக்குப் பிறகும் விதைத் தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: மக்காச் சோளம் / நிலக்கடலை – வெங்காயம் / அவரை / கம்பு (விதைத் தாவரம்)
19.பொதுவாக ஓம்புயிர்த் தாவரங்களைப் பயிரிட்ட பின் கீழ்க்காணும் சார்நிலை உயிரினங்களுடன் கூடிய பயிர்களைப் பயிரிட வேண்டும்.
1) ரைஸோபியம் மெலிலோட் – லியூசர்னா , இனிப்பு குளோவர், வெந்தயம்
2) ரைஸோபியம் டிரைபோலி – பெர்ஸீம், பெர்ஸியன் குளோவர்
3) ரைஸோபியம் லெகூமினோஸோரம் – மைசூர் பருப்பு, கேசரி பருப்பு, பட்டாணி
4) ரைஸோபியம் பர்ஸயோலி – பீன்ஸ், பச்சைப் பயிறு, உளுந்து, பில்லிபெஸாரா
5) ரைஸோபியம் லியூபின் – லியூபின்ஸ்
6) ரைஸோபியம் ஜப்பானிகம் – அவரை, தட்டைப்பயிறு, சனப்பை, கொண்டைக்கடலை, சோயாபீன்
ஒரே பயிரை பயிரிடாமல் இவ்வாறு பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவது மிகுந்த இலாபத்தை ஈட்டித் தரும். அத்தோடு மண் வளத்தைப் பாதுகாக்க ஏதுவாகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories