அதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்
அதிக இலாபம் தரும் சந்தனமரம்
மங்கலப் பொருட்களில் முக்கியமானதாகத் திகழும் சந்தனம் என்று சொல்லும்போதே அனைவர் முகமும் மலர்கிறது. காரணம் அதன் நறுமணம். எத்தனை பெரிய கூட்டத்தில் இருந்தாலும் ஒரிஜினல்(Original) சந்தனத்தின் மணத்திற்கு ஈடு-இணையே இல்லை.
நீங்களும் வளர்க்கலாம்
சந்தனமரம் வளர்ப்பு என்றாலே மக்கள் மனதிலே ஒரு பயம். சட்ட சிக்கல், திருடர் பயம், தாமாக விற்கமுடியாது என்ற நிலைமை போன்ற காரணங்களால் சந்தனமர வளர்ப்பை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் தேவை மற்றும் வருமானம் மிக மிக அதிகம். தென்னிந்தியாவிலே வறட்சியை தாங்கி நன்கு வளரும் மரம் என்றால் அது சந்தன மரம்தான்.
வருமானம் ஈட்டுவது எப்படி?
சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். சந்தன மரத்தின் ஏலம் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே சந்தன மரங்களை வளர்க்க அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சந்தன மரங்கள் வேலிகளிலும், தரிசு நிலங்களிலும் தானாகவே வளர்ந்து வறட்சியிலும் பசுமையாக காட்சிதரும் அழகிய மரமாகும். தரிசு நிலங்கள் தங்கம் விளையும் பூமியாகும்.சந்தன மரங்களை வீடுகளிலும், பூங்காக்களிலும், விவசாய நிலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வளாகங்களிலும் வளர்க்கலாம். இந்தியாவின் அனைத்து நிலப்பகுதிகளிலும், தட்ப வெப்ப நிலைகளிலும் வளம் குன்றிய பாறை நிலங்களிலும் வளரக்கூடியது.
ஒரு கிலோ சந்தன மரக்கட்டை 6,000 ரூபாய் வரை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து 3 முதல் 5 கிலோ வாசனை மிகுந்த வைரப் பகுதி கிடைக்கும். 20 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரத்தின்மூலம் 3லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறலாம். அதனால், விவசாயிகளும் பொதுமக்களும் விவசாய நிறுவனங்களும் ஆர்வமுடன் சந்தன மரங்களை வளர்க்கலாம்.
மரங்களின் சிறப்பு இயல்புகள் :
தென்னை மூன்று வருடத்தில் 3 அடி உயரத்தில் வருடம் 480 காய்
மானாவாரியில் VRI முந்திரி, நெல்லிக்காய் சாகுபடி ரூபாய் 5 இலட்சம் இலாபம் /.1 ஹெட்டர்
எலும்மிச்சை கன்று 3 அடி உயரத்தில் நடவு செய்துதரப்படும்.
சிவப்பு சந்தனமரம் 3 மரம் 1 டன். 1 டன் விலை 40 இலட்சம்
புதிய ரக பழ மற்றும் அனைத்து வகையான மர கன்றுகளும் கிடைக்கும்.