ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?

 

செடி அவரை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். செடி அவரை விதைத்து இரண்டு மாதத்தில் காய் பறிக்கலாம்.

கொடி அவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யலாம் நிறைய காய் கொடுக்கும். நீண்ட காலத்துக்கு அறுவடை எடுக்கலாம்.

ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?

வீட்டுக்கு முன்பாக ஒரு வேப்ப மரத்தையும், அதற்கு பக்கத்தில் ஒரு முருங்கை மரத்தை வளர்க்கலாம்,

வீட்டிற்கு ஒரு நெல்லிக்காய் மரம், ஒரு பப்பாளி மரம் ,மா மரம் போன்ற மரங்களை இடத்தின் வசதிக்கேற்ப, ஒரு எலுமிச்சை மரத்தையும் ,அதன் நிழல் நிழலில் கருவேப்பிலைச் செடியை வளர்க்கலாம்.

தண்ணீர் போகும் இடத்தில் வாழைமரம், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் வளர்க்கலாம்.

வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் சீத்தாப்பழ மரத்தையும், வீட்டில் நிறைய இடம் இருக்கும் பட்சத்தில், பலா கன்றுகளை நடவு செய்து வளர்க்கலாம்.

கால்நடைகளுக்கு மரவள்ளிக்கிழங்கை எப்படி கொடுக்கலாம்?

கால்நடைகளுக்கு கொடுக்கும் மரவள்ளி கிழங்கில் மாவு பொருள் ப்ரூஸ் அமிலம் உள்ளது .அதுவும் கசப்பு சுவையுள்ள கிழங்குகளில் அதிக அளவில் உள்ளதால் சிறு துண்டுகளாக வெட்டி சூரிய ஒளியில் உலர்த்தி நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து கால்நடைகளுக்கு கொடுப்பதால் நச்சுத்தன்மை குறையும்.

பால் கறக்கும்போது ஏன் முதல் பாலை கீழே வீசி விட வேண்டும்?

பால் கறக்கும்போது முதலில் சில துளிகளை பாத்திரத்தில் விடாமல் பீய்ச்சிக் கீழே விட வேண்டும்.

ஏனெனில் துளிகளில் அதிகமான அளவு பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த நடைமுறையை பயன்படுத்துவதன் மூலம் சுத்தமான பால் கிடைக்கும்.

ஆட்டுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது .என்ன மருந்து கொடுக்கலாம்?

வேப்பங்கொழுந்து ,கொய்யா கொழுந்து, மாதுளம் கொழுந்து ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து 100 கிராம் அளவு வெல்லத்துடன் சேர்த்து கொடுக்கவும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories