கலப்பு மரம் வளர்ப்பு பற்றித் தெரியுமா?…

தற்போதைய சூழலில் வேலையாள் பற்றாகுறை தண்ணீர் பற்றாகுறை போன்ற பிரச்சனைகளால் விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, இருந்தபோதும் சம்சாரிகளிடம் சிறு தயக்கம் மரம் வைத்தால் 25, 30 ஆண்டுகள் காத்திருக்கவேண்டுமே அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது என்ற குழப்பம், இதற்க்கு தீர்வு தான் கலப்பு மரம் வளர்ப்பு.

ஒரே வகையான வயது அதிகம் உடைய மரங்களை வைத்துவிட்டு பல வருடம் காத்திருப்பதைவிட வெவ்வேறு வயதுடைய மரங்களை கலந்து நடுவதன் மூலம் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும்,வரப்பு ஓரங்களில் தேக்கு,வேங்கை, மகோகனி,ரோஸ்வூட்,மாஞ்சியம்,ஆச்சா போன்ற மரங்களையும் இடையில் குமிழ்,மலைவேம்பு போன்ற மரங்களையும் 15 அடி இடைவெளில் நடவேண்டும் இடைப்பட்ட பகுதியில் சின்குனிய சவுக்கு 5 அடி இடைவெளியில் நடவேண்டும். இவ்வாறு நடும்போது சவுக்கு 4 ஆண்டுகளிலும் குமிழ் 8 ஆண்டிலும் வருமானம் தரும்,குமிழ் மருதாம்புமரம் என்பதால் அடுத்த 7 ஆண்டுகளில் இரண்டாம்முறையாக அறுவடைக்கு வரும்,தேக்கு,வேங்கை,மகோகனி போன்ற மரங்களை 20,25 ஆணுக்களுக்குப்பின் அறுவடை செய்யலாம்.

இவ்வாறு பல மரங்களை கலந்து நடுவதால் ஒரு மரத்தின் இலை மற்ற மரங்களுக்கு உரமாகும்.

நடவு முறையை பார்போம்

மரம் நடும் இடத்தை இரண்டுசால் உளவு ஓட்டியபின் 2 * 3 அடி அளவுள்ள குழிகளை 5 அடிக்கு 5 அடி இடைவெளில் எடுத்து அதில் தொழுவுரமிட்டு சிலநாள் ஆறப்போடவேண்டும், அதன்பின் தரமான நாற்றுகளை வாங்கி நடவு செய்யலாம்,வரப்பு ஓரங்களில் தேக்கு,வேங்கை,மகோகனி,ரோஸ்வூட், மாஞ்சியம்,ஆச்சா போன்ற மரங்களை 15 அடிக்கு 15 அடி இடைவெளியிலும், உட்புறம் 15 அடிக்கு 15 அடி இடையில் குமிழ்,மலைவேம்பு போன்ற மரங்களை சில வரிசைகள் நட வேண்டும் இடைப்பட்ட பகுதியில் சிங்குனிய சவுக்கு 5 அடிக்கு 5 அடி (படத்தில் உள்ளதுபோல்) இடைவெளியில் நடவேண்டும். இம்முறையில் மரம் வளர்க்கும் பொது நான்கு இந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருமானம் கிடைப்பதுடன் வேலையாள் பற்றாக்குறை தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளும் வருவதில்லை.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories