தென்னந்தோப்பை பராமரிக்கும் முறைகள்!

பல அடுக்குப் பயிர்கள், பந்தல் வகை பயிர்கள்,மலர் பலவகைப் பயிர்கள், மூலிகை பயிர்கள்,மல்பெரி , உயரமாக வளரும் பயிர்கள் ,மூலிகைப் பயிர்கள் ,வாசனைப் பயிர்கள் இப்படி கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட பல்வேறு தாவரங்கள் உள்ளன. எந்த ஒரு மண்ணுக்குரிய பயிர்கள் பல உள்ளன. எந்த அளவு நீர் இருந்தாலும் அதற்கு ஏற்ப நன்கு வளரும் தாவரங்கள் உள்ள [[ன. மறைவான பகுதிகளில் மட்டுமல்ல பிரச்சனை உடைய மண்ணாக இருப்பினும், உப்பு நீராக இருப்பின் ,உரிய ஊடுபயிர்கள் பயிரிடலாம். தென்னந்தோப்பில் பல பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். மேலும் சில உத்திகள் தென்னந்தோப்பில் மேற்கொண்டு லாபம் அடையலாம் .அந்த வகையில் தென்னந்தோப்பில் பராமரிக்கும் வழிமுறைகளை இங்கு காணலாம்.

தென்னந்தோப்பில் பயனற்ற களைச் செடிகளை வளர்த்து எடுப்பதை விட்டுவிட்டு நிலப்போர்வை உத்தியையும் ,கலைக்குரிய கருவிகளின் பயன்பாடு உத்தியையும், சொட்டு நீர் பாசன உத்தியையும், கடைப்பிடித்து ஊடுபயிர் தேர்வு செய்யலாம் பொதுவாக தென்னந்தோப்பில் காய்கறிப் பயிர்கள் பயறு வகைகள் உள்ளிட்டவற்றையும் ஊடுபயிராக பயிரிடலாம்.

வீணாகும் தென்னை ஓலைகளை இயந்திர உதவியுடன் இயற்கை உரமாக மாற்றும் தொழில்நுட்பம் தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

தென்னை ஓலைகளை மண்ணில் மட்கச் செய்து அவற்றையும் இயற்கை உரமாக மாற்றலாம்.

விவசாய நிலத்தில் சிறிய குழி தோண்டி கோக்கனட் கட்டர் என்ற உபகரணம் மூலம் தென்னை ஓலைகளில் செலுத்தி அந்த தென்னை ஓலை பொடியாக்கி மாற்றி அதனை குழியில் போட வேண்டும். பிறகு தென்னை ஓலை பொடி அதன் மீது சாண உரம் நிரப்பி குழியை மூடவேண்டும். ஆறு மாதம் கழித்து தென்னை ஓலை பொடி இயற்கை உரமாக மாறிவிடும். இதனை தென்னை மரங்களுக்கு பயன்படுத்தலாம்.

தென்னை ஓலையை இயற்கை உரமாக மாற்றுவதன் மூலம் எரி பொருளாக பயன்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் புகை மாசு தவிர்க்கப்படுகிறது தென்னை ஓலையை இயற்கை உரமாக பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உழவு செலவு மிச்சமாகிறது மேலும் தென்னை மரத்தைச் சுற்றி களைச்செடி வருவது தவிர்க்கப்படுகிறது. ரசாயன உர பயன்பாடு குறைக்கப்படுகிறது.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories