தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?

தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?

 

 

 

தென்னைமரத்தை முறையாக பராமரிப்பது எப்படி?
தென்னையின் சிறப்பு
தென்னையில் வாழை ஊடுபயிர்

கற்பதரு என்று அழைக்கப்படும் தென்னை மரத்தை மிகவும் சரியான முறையில் பேணுவது அல்லது வளர்ப்பது மிகவும் அவசியமாகும் அதற்கான காரணம் பலவும் உண்டு. நானறிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்கிறேன் அதற்கான பதிவே இது..

தென்னை மரங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சுண்ணாம்பு மற்றும் செம்மண் கொண்டு மேல்பூச்சு பூசுவோம். தை மாதம் ஒரு முறையும்,ஆடியில் ஒருமுறையும். இது வழக்கமான ஒரு நடைமுறை.

மனிதர்களாகிய நமக்கு வரும் நோய்களுக்கு இரும்பு, சுண்ணாம்பு சத்து குறைபாடு என்பதை நன்கு அறிவோம். மனிதர்கள் போலவே மரங்களுக்கும் அத்தகைய குறைபாட்டை போக்கவே இரும்புச்சத்து நிறைந்த செம்மண்ணும் கால்சியம் சத்து நிறைந்த சுண்ணாம்பையும் மரத்திற்கு பூசி மரத்திற்கு ஊட்டச்சத்தை வழங்கும் ஒரு எளிய மரபான முறையாகும்.

இவ்வாறே மண் இரும்பு ஆணியைக் கொண்டு மரத்தின் வேர்ப்பகுதியில் அடித்து விடுவதுண்டு. கொடுவாள் மற்றும் கதிர்அறுக்கும் கருக்கு அரிவாள் கொண்டு மரத்தை காயப்படுத்தும் பழக்கமும் உண்டு இரும்பால் ஆன பொருட்களை பயன்படுத்த இதில் உள்ள பெர்ரஸ் அயனியை கிரகிக்கும் தன்மை தென்னை மரத்திற்கு உண்டு….

 

 

தென்னையின் சிறப்பு

தென்னை மரங்கள் மற்ற மரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது….

மின்னல் மின்னும் போது உருவாகும் ஆயிரகணக்கான வோல்ட் மின்சாரத்தை உள்வாங்கி பூமிக்கு கடத்துகிறது பூமியிலுள்ள High reaction element எனப்படும் சோடியம் பொட்டாசியம் சிலிகா போரான் இன்னும் போன்றவற்றை அயனியாக மாற்றம் செய்கிறது அந்த அயனிகள் வேரில் இருந்து உறிஞ்சி மரத்தின் நடுப்பகுதியான சைலம் வழியாக மேல்நோக்கி கடத்துகிறது

இப்படி உருவாகும் அயனிகளை உள்ளடக்கிய இளநீர் உயிர் நீராக மனிதனுக்கு உதவுகிறது இதில் பொதிந்து கிடக்கும் நுண்ணூட்டங்கள் உடலிலுள்ள செல்களுக்கு ஆற்றலை தருகிறது இத்தகைய தேங்காயை பயன்படுத்தும் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

சித்த மருத்துவத்தில் மிக உயர்ந்த மருந்தான அமுரி உற்பத்தி செய்ய தென்னை மரத்தின் குருத்தை சாறெடுத்து பயன்படுத்துவதும் இதனடிப்படையில்தான் இவற்றிலுள்ள அயனிகள் மருந்தை மேலும் மேலும் அடர்த்தியாக்குகிறது. கள் இறக்க பயன்படும் முட்டியில்(சட்டி) பூசப்படும் சுண்ணாம்பை இரண்டு நாழிகையில் அயனியாக மாற்றம் செய்வதை அனுபவத்தில் கண்டுள்ளோம் இத்தகைய தரவுகளை தனதாக்கியதால் தான் தென்னை மரத்தை கற்பகதரு என்று அழைக்கிறோம்.

ஆனால் தென்னையை பணபயிராக மாற்றம் செய்த பசுமைபுரட்சி விவசாயம் தென்னையை தாக்கும் ஈரியோபைட் மற்றும் காண்டாமிருக வண்டு தாக்குதலிலிருந்து காப்பாற்ற மோனோகுரோட்டோபாஸ் என்ற விஷத்தை வேரில் கட்ட சொல்லி தந்தது. ஆனால் இந்த விஷமானது நமது உடல் செல்களில் எத்தகைய தீங்கினை ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலான தென்னை உற்பத்தியாளர்கள் கருத்தில் கொள்வதும் இல்லை இந்த விசமான மோனோகுரோட்டோபாஸ் பூச்சி கொல்லியை எதற்காக தடை செய்தார்கள் என்று கூகுள் தேடி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்….

பொள்ளாச்சி உடுமலை பகுதியில் உள்ள பெரும்பான்மையான பெண்களுக்கு தாடி மீசையில் முடி உருவாகி ஆண்தன்மை உருவாக பல காரணிகள் இருந்தாலும் இந்த தென்னை விவசாயத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட தேங்காயை உணவாக பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் இது மிகவும் ஆய்வுக்குரிய தரவாகும் தமிழகத்தின் மற்ற எந்தப் பகுதியை விட இந்தப்பகுதி பெண்களுக்கே தாடி மீசையில் அதிகமாக முடி வளர்ச்சி உள்ளதை கருத்தில் கொண்டு மருத்துவ ஆய்வாளர்கள் கவனிக்கவும்.

சரி விடயத்திற்கு வருவோம் தென்னைக்கு சரியான ஊட்டத்தினை கொடுக்கும்போதும், மண்ணில் உள்ள மின்கடத்தும் திறனை குறைப்பதன் மூலமமாக தென்னையில் நல்ல மகசூல் உருவாக்க முடியும் கொஞ்சம் மெனகெடல் வேண்டும்

தக்கப்பூண்டு விதைத்து வளர்ந்த பின்பு மடக்கி சேர் உழுது மண்ணை பண்படுத்தும் வழக்கம் இரண்டு மூன்று தலைமுறைகளாக உண்டு எங்க பகுதியில்.

தக்கைபூண்டு மக்கும் போது அதில்உள்ள கார்பன் காரத்தன்மை உடைய வேதியியல் பொருட்களை நடுநிலையாக்கி(Nutural) மண்ணைபண்படுத்துகிறது.

மேலும் மண்ணில் மின்கடத்தும் திறன் குறையக் குறைய மண்ணிலுள்ள நுண்னூட்டங்களை மரம் வேகமாக எடுத்துக் கொள்ளும் என்கிறது நவீன அறிவியல்.

தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்தும்போது மண்ணின் வேதியல் தன்மை வெகுவாக குறைக்கப்படுவதால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது ….வேதியியல் உரங்கள் அதிகமாக பயன்படுத்தும் நிலங்களில் உப்புத்தன்மை அதிகரித்து மகசூல் குறைந்து காலப்போக்கில் மரம் பட்டு போவது அதிகரித்து வருகிறது.

உடுமலை முதல் பொள்ளாச்சி மற்றும் அவிநாசி வரையிலுள்ள பெரும்பாலான நிலங்கள் கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் அதிகம் நிறைந்துள்ளது இது மிகவும் கவனிக்கத்தக்கது.வாழை ஊடுபயிர்

தென்னந்தோப்பில் இருக்கும் உப்புத்தன்மையை மாற்ற வாழை மரங்களை தென்னையை சுற்றி நடவு செய்யும்போது நிலத்தில் உள்ள உப்புக்களையும் வேதியியல் உரங்கள் உருவாக்கும் தீமைகளை வெளியேற்றிவிடுகிறது வாழை மரங்கள் உப்பை உறிஞ்சும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதனால்தான் கழிவுநீர் அதிகம் புழங்கும் புடகலையில் வாழை மரத்தை நட்டு வைப்பது நமது வழக்கம்…

தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்கள் மூலமும் வாழை மரங்கள் மற்றும் சுண்ணாம்பு செம்மண் பூசுதல் ஆட்டு மாட்டு சாணம் எருக்கன் இலை தளைகளை பயன்படுத்தி நல்ல தோப்பை நிர்வகிக்கலாம் இதன் மூலம் தரமான சத்துக்கள் நிறைந்த இளநீர் தேங்காய் உற்பத்தி செய்து மக்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவது விவசாயிகளின் தலையாய கடமையாகும்.

இதனை நான் பதிவிட காரணம்…

மரபு முறையில் தென்னை சாகுபடி செய்து மரம் ஒன்றில் சுமார் 300 காய்களுக்கு மேல் அறுவடை செய்த திருச்செங்கோடு அருகே உள்ள இளங்கோ என்பவர் தோட்டத்திற்கு சென்று நீங்களும் பார்க்கலாம். மேலும் இந்த மரத்தின் ஓலைகள் கரும் பச்சையாக உள்ளது.  இதில் விளையும் இளநீரில் சுமார் 600 மில்லிக்கும் மேலாக நீர் உள்ளது.  இந்த மரத்திற்கு பயன்படுந்தபடும் தண்ணீரானது சுமார் 1,200 அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து இந்த நீர் மிகவும் உப்புக்கரிக்கும் வாயில் வைக்க இயலாத அளவிற்கு உப்பு. ஆனால் இளநீர் தேவாமிர்தம் போல மிகவும் சுவையாக இருக்கும்,  காரணம் மரத்திற்கு தரப்படும் ஊட்டம் தான். ஒரு தேங்காய் கொப்பரையில் எடை 150கிராமிலிருந்து 200 கிராம் வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

நாம் வாங்கி குடிக்கும் பெரும்பாலான இளநீர் உப்பு கரிக்கிறது இளநீர் குடித்தவுடன் எத்தகைய சுறுசுறுப்பும் இல்லாமல் இருக்கிறதே ஏன் எதனால ……

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories