திரமி சிகிச்சை மாட்டு சிறுநீர் கோமியம் தயாரிக்கும் முறை பற்றி கூறுக?
5 லிட்டர் மாட்டு சிறுநீர் 250 கிராம் வெல்லம் 250 மில்லி திறன் நுண்ணுயிரி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் கலந்து 7 முதல் 10 நாட்களுக்கு நொதிக்க விடவும் .அதன் பிறகு இந்த கரைசலை 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் நீரில் 3 முதல் 5 மில்லி கலந்து தெளிக்கலாம் .பாசன நீரில் 20 முதல் 30 லிட்டர் அதாவது ஒரு ஏக்கருக்கு கலந்துவிடலாம். இது பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
இயற்கை உரங்களை பயிர்களுக்கு போகும் தருணங்களில் பயன்படுத்தலாமா?
பயிர் வளர்ச்சியின் 30 நாட்களில் இருந்து இயற்கை உரம் கொடுக்கலாம். இயற்கை உரங்களை பயிர்கள் பூக்கும் தருணத்திலும் கொடுக்கலாம்.
செடியில் காய்கள் வைக்கும் தருணத்தில் வாரம் ஒருமுறை இயற்கை உரங்களை கொடுக்கலாம்.
தென்னை மரத்தின் ம ட்டைகள் மற்றும்குருத்துகள் சிறிய ஓட்டைகள் உள்ளது. அதற்கு என்ன செய்வது?
நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களின் வேர்களுக்கு அருகில் சணப்பை அல்லது பசுந்தாள் பயிர்களை வளர்த்து மடக்கி விட வேண்டும்.
ஒரு மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 5 கிலோ மண்புழு உரம் இடவேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
பூஞ்சானக் கொல்லி தயாரிப்பு முறைகளை பற்றி கூறுக?
சுக்குத்தூள் 200 கிராம் பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு குளிர வைக்க வேண்டும்.
பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து தரமில்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்கவேண்டும். மேலே படிந்திருக்கும் பால் ஆடையை அகற்றி விடவேண்டும்.
ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். 21 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
கன்றுக்குட்டிக்கு மாற்று சீம்பால்பால் எப்படி கொடுக்கலாம்?
முட்டை ஒன்று (60 கிராம்) தண்ணீரில் 300 மில்லி பால் 100 மில்லி விளக்கெண்ணை அரை ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து காலை மாலை என தினமும் கண்டு பிடிக்க புகட்ட வேண்டும் .