பாக்கு மரத்தை தாக்கும் பூச்சிகளை விரட்டுவது எப்படி?…

மங்கள நிகழ்ச்சி என்றால் அதில் வெற்றிலை, பாக்கிற்கு முக்கியத்துவம் உண்டு. ஆண்டுகள் மாறினாலும் இதில் மற்றும் மாற்றமில்லை.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாக்குகளை பாக்கு மரத்தில் இருந்து அறுவடை செய்யும் காலகட்டத்தில் பாக்கு பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமில்லை.

பாக்குகளை சாகுபடி செய்வது முதல், அறுவடை வரை பல்வேறு இடர்பாடுகளை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பாக்கு மரத்தை தாக்கும் பூச்சிகளில் நாவாய்பூச்சி எனப்படும் கார்வல்ஹோயா அரிக்கே பூச்சி, வேர்ப்புழு எனப்படும் லூக்கோ போலிஸ் பர்மிஸ்டெரி, சோளம் அல்லது வெள்ளை சிலந்தி எனப்படும் ஒலிக்கோநைக்ஸ் இண்டிகஸ், பூங்கொத்து புழு எனப்படும் டிரகாபா முண்டெல்லா ஆகிய பூச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த்து ஆகும்.

கார்வல்ஹோயா அரிக்கே பூச்சி இளம்குஞ்சு பருவத்தில் கரு ஊதாநிறம் உடலில் தலைப்பகுதி இளம் மஞ்சளாகவும், சிவப்பு நிற கண்களையும் பெற்றிருக்கும். வளர்ந்த புழுக்கள் வயிற்றுப்பகுதியில் கருப்பு நிறமாக காணப்படும். இவை தாக்கும் பயிர்கள் நடுக்குறுத்து வளர்ச்சி குன்றி சுருங்கி விரிய முடியாமல் போகும். இவற்றைக் கட்டுப்படுத்த டைமீதோயேட் மருந்தை குறிப்பிட்ட சதவீதம் தெளிக்க வேண்டும்

வேர்ப்புழு எனப்படும் லூக்கோபோலிஸ் பர்மிஸ்டரி பூச்சி புழுப்பருவத்தில் சி வடிவத்தில் தலையில் பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்தவகை புழுக்கள் வேர்களை கடித்து சேதப்படுத்தும், தாக்கப்பட்ட மரங்கள் நோய்வாய்ப்பட்டது போல் காட்சியளிக்கும். இலைகள் மஞ்சளாகிவிடும். தண்டு சிறுத்து, காய்கள் கொட்டிவிடும். இவற்றைக்கட்டுப்படுத்த வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும். மண்ணில் கரிமப்பொருட்களையும், ஊண் தடுப்பான்களையும் இட வேண்டும்.

சோளம் அல்லது வெள்ளைச்சிலந்தி எனப்படும் ஒலிகோநைக்ஸ் இண்டிக்ஸ் பூச்சி இலைகளின் அடிப்பகுதியில் நூலாம்படைகளின் சிலந்திகள் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.இவற்றை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.

பூங்கொத்துப்புழு எனப்படும் முண்டெல்லா பூச்சி புழுப்பருவத்தில் அழுக்கேறிய வெண்ணிறப் புழுக்கள் தலை பழுப்புநிறமாக காணப்படும். இதன் புழுக்கள் பூங்கொத்துகளை நூலாம்படையில் ஒன்றாக பிணைத்து அதனுள்ளிருந்து தாமதமாகும். பூங்கொத்து மஞ்சளாகிவிடும். பூங்கொத்துகளின் மேல் சிறு துளைகளும், அதன் கழிவு பொருட்களும் இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த தகுந்த கரைசலை கொண்டு பூங்கொத்துகளின் மீது தெளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories