மரக்கன்றுகள்

கோடைக்காலம் தான் மரங்கள் நடுவதற்கு தகுந்த காலம்.

மரக்கன்றுகள் நடும் போது குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருக்க வேண்டும். அத்தகைய மரக்கன்றுகள் தான் பக்குவப்பட்ட மரக்கன்றுகள் எனப்படும்.

2×2 அடி என்று சதுரம் 2 அடி ஆழமும் உள்ள குழியை எடுத்து ஒரு பங்கு மணலையும் முதலில் கொட்ட வேண்டும்.

அதற்கு மேல் எரு இரண்டு பங்கு செம்மண் 3 பங்கு இட்டு ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்கு போட வேண்டும்.

தயார் செய்யப்பட்ட குழியை ஆறு மணி நேரம் அப்படியே காலியாக விட்டு விட வேண்டும். இதனால் குழியில் உள்ள வெப்பம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும்.

இவ்வாறு தயாரான குழியில் மரக்கன்றுகளை காலை அல்லது மாலை வேளையில் தான் நடவேண்டும். வழக்கம்போல மரக்கன்று நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது.பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு தேவைப்படும். இவை இரண்டு மூன்று ஆண்டுகளில் பயனளிக்க தொடங்கிவிடும்.

ஆனால் பணம் தரும் மரங்கள் பயனளிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக வளர்கிறதோ அந்த அளவு பயனை பணமாகதரும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories