மரம் நட விருப்பமா? களம் அமைத்துத் தருகிறது ஈஷா!

நம் வாழ்வின் தொடக்கம் இறுதிவரை பயணிக்கும் உன்னத உறவு என்றால் அது மரம். அதாவது தொட்டிலில் தொடங்கி பாடை வரை. அத்தகைய சிறப்பு மிக்க மரங்களை நடுவதன் மூலம் நாம் இந்த பூமியில் பல யுகங்களுக்கு வாழ முடியும்.

அப்படி மரம் நட விரும்பினாலும், எங்கு நடுவது, அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்களுக்கு, சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் இணைய ஈஷா அறக்கட்டளையின் காவிரி கூக்குரல் இயக்கம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரம் நட விரும்பு என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பொது மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று மரக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.

காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. அவ்வாறு மரம் நட முன்வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் ஈஷா மரம் சார்ந்த விவசாய திட்டத்தின் பிரதிநிதிகள் நேரில் சென்று மனை மற்றும் நீரின் தன்மைகளை ஆய்வு செய்வர்.

பின்னர் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற மரக்கன்றுகளை பரிந்துரை செய்கின்றனர் பின்னர் விவசாயிகளின் தேர்வின் அடிப்படையில் மரக் கன்றுகள் விளைநிலங்களில் நடப்படுகின்றன. இவ்வாறு விவசாயிகளின் விளைநிலங்களில் மரக் கன்றுகள் நடப்படுவதால் மரக்கன்றுகளின் பராமரிப்பு எளிதாகிறது. அதே போல் மரங்களினால் மண் வளமும், நீர் வளமும் பெருகும் நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 30 ஈஷா நாற்றுப் பண்ணைகள், இயற்கை முறையில் மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் மாதம்தோறும் வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. இதன் தொடக்கமாக முதல் நிகழ்வு கரூர் மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தில் நவம்பர் 18ம் தேதி புதன் கிழமை (18-11-2020) காலை 10:00 மணி அளவில் நடைபெற உள்ளது எனவே,

இந்நிகழ்வில் தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தைத் தொடர்புக் கொண்டு தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories