மழை மற்றும் காற்றினால் வாழை மரம் சாயாமல் இருக்க என்ன செய்யலாம்?
வாழை தோப்பை சுற்றிலும் சுபாபுல் மற்றும் பயன்தரும் மரங்களை உயிர் வேலியாக நடுவதன் மூலம் காற்று வயலுக்குள் வருவதை தடுக்கலாம். இதன்மூலம் வாழைமரம் சாய்வது தடுக்கலாம்.
கரும்பு கடலை மற்றும் சோளம் ஆகியவற்றை பூச்சி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வேப்ப இலை, நொச்சி இலை,பு ங்கம் இலை போன்றவற்றை கலந்து சோளம் ,கடலையை சேமிக்கலாம் இதனைப் பயன்படுத்தி பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
அரளி செடிக்கு தினமும் நீர் பாய்ச்ச வேண்டும?
நடவு செய்த 3 மாதம் வரை வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் அதன் பிறகு பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வேர்கடலையை எத்தனை நாட்களில் அறுவடை செய்யலாம்?
பொதுவாக வேர்க்கடலையை 1o5 நாட்கள் கழித்து அறுவடை செய்யலாம்.
மேலும் அறுவடையில் ஒவ்வொரு ரகத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மாட்டுப் பாலில் சத்துக்கள் குறைவாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?
பருத்திக்கொட்டை வைக்கலாம், புண்ணாக்கு கொடுக்கலாம், சூப்பர் நேப்பியர் புல் மாடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
முல்லைப் பூ மகசூல் அதிகரிக்க என்ன செய்யலாம்?
மாதம் இரண்டு முறை ஒவ்வொரு செடிக்கும் 1.5 கிலோ தொழு உரத்துடன் சூடோமோனாஸ் 2 கிராம் கலந்து கொண்டு இட வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் தொடர்ந்து வாரம் இரு முறை தெளிக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதல் குறைக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.
இயற்கை இடுபொருட்கள் அளவை பயிர்களுக்கு அதிகமாக கொடுத்தால் பின் விளைவுகள் ஏற்படுமா?
மண்புழு உரம் ,தொழு உரம் போன்ற உரங்களை அதிகளவில் கொடுக்கலாம் இதனால் பயிர்களுக்கு எதுவும் ஆகாது.
ஆனால் அக்னி அஸ்திரம், இஞ்சி பூண்டு கரைசல் போன்ற வீரியம் அதிகமாக உள்ள பூச்சிவிரட்டிகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்துவது நல்லது.