அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்!

அழகிய வண்ண மலரான ரோஜாப் பூவில் பல மருத்துவ குணங்கள் (Medical Benefits) அடங்கியுள்ளன. ரோஜா மலரை (Rose) அழகுக்காக மட்டுமின்றி மருத்துவ உலகிலும் பெரிதளவு பயன்படுகிறது. ரோஜா மலரின் பயன்களை இப்போது அறிவோம்.

ரோஜாவின் மலரின் பயன்கள்:
ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
ரோஜாவிலிருந்து (Rose) எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.
குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து (Blood clean) சருமம் பளபளப்பாகும்.
ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.
பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் 2 கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதித்ததும், வடிகட்டி, காலை, மாலை இருவேளையும் 1 டம்ளர் வீதம் குடிக்க வேண்டும். இவ்வாறு 7 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.
ரோஜா இதழ்களை வேளைக்கு 1 கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தைச் சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் (Cold) ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் நீங்கும்.

50 ரோஜா இதழ்களை அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, அத்தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி விடும்.
10 கிராம் ரோஜா இதழ்களை 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும்.
ரோஜா இதழ்களுடன் 2 மடங்கு கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்து, இதை காலை, மாலையில் நெல்லிக்காய் (Gooseberry) அளவு சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
1 மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதயம் (Heart), கல்லீரல் (Liver), நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும்.
இனி, ரோஜா மலரை அழுகுக்காக மட்டுமின்றி மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories