கொத்தமல்லி இலையும்.. அதன் பயன்களும்…!!

கொத்தமல்லி இலையும்.. அதன் பயன்களும்…!!

🌿 கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும்.

🌿 சாப்பிடும் உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும். வயிறு மற்றும் குடல் உறுப்புகள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது.

🌿 கொத்தமல்லி இலை நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம்.

🌿 தோல் தடிப்பு, அரிப்பு, இதர சருமம் தொடர்பான வியாதிகளுக்கு கொத்தமல்லி இலைகளை அரைத்து அதை தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

🌿 தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்து கர்ப்பிணி பெண்கள் குடித்து வந்தால் அடிக்கடி ஏற்படும் தலைச்சுற்றலும், வாந்தியும் நீங்கும்.

🌿 கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் ஆகும்.

🌿 கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை காணப்படுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.

🌿 கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories