சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள்

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.
கிருமி நாசினி:- வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளையும்,அமீபா,மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் வெளியாக்கும் மருந்து ( கவனிக்கவும் கொல்லும் மருந்தல்ல வெளியாக்கும் மருந்து ) ( ANTHELMINTIVE ) .
அடுக்கிளநீர் , அம்மான் பச்சரிசி , அழிஞ்சில் மரம் ,அன்னாசியிலை , ஆடா தோடை யிலை , ஆடு தீண்டாப் பாளை , ஆற்றுத் தும்மட்டி , இளங் கொட்டைப் பாக்கு , ஊசித் தகரை , ஏழிலைப் பாலை , கருங்காலி வேர் , கருஞ்சீரகம் , கருஞ்செம்பையிலை , கறுப்பு அழிஞ்சில் மரம் , கலியாண முருக்கம் பட்டை , காக்கட்டான் ( வெண் சங்குப்பூ ) , காட்டாத்தி மரம் , காட்டுச் சீரகம் ( சன்னி நாயகம் ) , காய்ச்சுக் கட்டி ( கருங்காலிக் கட்டையின் சத்து ), கத்தக் காம்பு , கார்போக அரிசி , கிச்சிலிக்காய் , கொட்டைப் பாக்கு , சதாப்பு இலை , சரக்கொன்றைப்பூ , சீமைச் செவ்வந்திப்பூ ,சீமையகத்தி , சுண்டைக்காய் , சுண்டைக்காய் வற்றல் , சோரியிளநீர் , திக்காமல்லி , நல்வேளை வித்து , நாய்க்கடுகு , நாரத்தங்கச்சல் ( நாரத்தை வற்றல் ) , நொச்சி இலை , பச்சிள நீர் ( பச்சை நிறத்திலுள்ள இளநீர்க்காய் ) , பப்பாய்க் காய் , பலாக்கொட்டை , பாகற் பழம் , பாகல் இலை , பிரண்டை , பெருங்காயம் , மட்டிப்பால் , மணலிக்கீரை , மலை வேப்பிலை , மலை வேப்பம் பட்டை , மாங்கொட்டை , மாசிப்பத்திரி , மாதுள மரப்பட்டை , மிதிபாகற்காய் , மூங்கிலிலை , மூங்கில் வேர் , யானைத்திப்பிலி , வசம்பு , வாய்விளங்கம் , விஷ்ணு கிரந்தி , வெண் சிவதை வேர் , வேப்பம் பூ , வேப்பம் நெய் , வேப்பம் வித்து , வேப்ப இலை , குடசப்பாலை , அக்ரூட் மரத்தின் பட்டை.
விஷ நாசகாரி:- விஷத்தை முறிக்கும் மருந்து ( ANTIDOTE ).
அவுரியிலை , அவுரி வேர் , ஆற்றுத் தும்மட்டி இலை , வெட்டி வேர் , எருக்கிலை , கடப்பம் வித்து , சதுரக்கள்ளிப் பால் , சிவனார் வேம்பு , சிறியா நங்கை , சிறு குறிஞ்சான் இலை , சிறு குறிஞ்சாக் கொடி , சிறு குறிஞ்சான் வேர் , சிறு சின்னி , சிறு துத்தி , நாக தாளிக் கள்ளி , நிர் விஷம் , நின்றாற் சுருங்கி , பெருஞ்சின்னி , பேய்ச்சுரையிலை , பேய்ச் சுரை வேர் , பேய்ப் பீர்க்கு , பொற்சீந்திற் கிழங்கு , மகிழம் வித்து , மணிப் புங்கு மரம் , முசு முசுக்கை வேர் , முருங்கை மரப்பட்டை , முள்துளசி , வாழைப்பூ ,வெள்ளெருக்கம் பால் , வேப்பம் வித்து.
இலைச்சாற்றில் ஆரோக்கியம் :-
* அருகம்புல் சாறு – ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு – இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு – வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு – நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு – விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
* நெல்லிக்கனி சாறு – நல்ல அழகை கொடுக்கும்.
* துளசி சாறு – தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
* முசுமுசுக்கை சாறு – மூக்கு நீர் வற்றும்.
* அகத்தி இலை சாறு – அடிவயிற்று மலத்தை நீக்கும்.
* கடுக்காய் சாறு – கட்டுடலை கொடுக்கும்.
* முடக்கத்தான் சாறு – மூட்டுவலி போக்கும்.
* கல்யாண முருங்கை சாறு – உடலை குறைக்கும்.
* தூதுவளை சாறு – தும்மல், சளி எல்லாம் நீக்கும்.
* ஆடாதொடா சாறு – ஆஸ்துமா தொல்லை நீக்கும்.
* கரிசலாங்கண்ணி சாறு – கண் பார்வை அதிகரிக்கும்.
மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!!!
ஒவ்வொருவருக்கும் காலையில் எழுந்ததும், சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். அதற்காக பலரும் காலையில் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க காபி அல்லது டீயைக் குடிப்போம். ஆனால் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்து பாருங்கள்
அதுவும் ஒரு மாதம் இச்செயலை தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உங்கள் உடலில் பல மாற்றங்களைக் காண முடியும். அதிலும் இதில் எலுமிச்சை என்னும் சக்தி வாய்ந்த பழம் இருப்பதால், உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராவதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதை நன்கு உணரலாம்.
உடல் சுத்தமாகும் :-
எலுமிச்சையில் உள்ள அசிடிட்டி, உடலின் pH அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் மருத்து நிபுணர்களும், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்
செரிமான பாதை சுத்தமாகும்:-
காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். மேலும் இந்த பானமானது கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும். குறிப்பாக சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அது குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கும்.
எடையைக் குறைக்கும் :-
எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
வயிற்று பிரச்சனைகள் :-
நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவரானால், சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி :-
உண்மையிலேயே சுடுநீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.
சருமத்திற்கு நல்லது :-
காபி, டீ போன்றவற்றில் காப்ஃபைன் உள்ளது. பொதுவாக காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும். எனவே காலையில் எழுந்ததும் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
சோடிய குறைபாட்டை தடுக்கும் :-
காலையில் உடற்பயிற்சி செய்து, அப்போது வெளிவரும் வியர்வையின் மூலம் சோடியம் உடலில் இருந்து வெளியேறும். அப்படி வெளியேறும் சோடியத்தை பூர்த்து செய்யும் வகையில் இந்த வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸ் இருக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories