செவ்வாழையின் அற்புதங்களை எடுத்துரைக்கும் சித்த மருத்துவர்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய் அத்தி பூத்தாற் போல காணப்பட்ட செவ்வாழைகள், இப்போது திரும்பிய இடமெங்கும் விற்பனையாகின்றன. மக்களும் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர். ஏனென்றால், இப்பழத்தினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்தச் செவ்வாழையின் (Red Banana) நன்மைகள் பற்றிச் சொல்கிறார் சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்

நன்மைகள்:
தொற்று நோய் கிருமிககிருமிகளைக் கொல்லும் சக்தி செவ்வாழைக்கு உண்டு.
செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
செவ்வாழையில் பொட்டாசியம் (Potassium) சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. 50 சதவீதம் நார்ச்சத்து (Fiber) காணப்படுகிறது.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
இரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச் சத்திற்கும் தேவையான வேதிப்பொருட்கள் செவ்வாழைப் பழத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப் பழத்துடன் அரை ஸ்பூன் தேனும் (Honey) எடுத்து வரலாம்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப் பழம் குணமாக்கும்.
தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர, ஈறுகள் வலுப்பெற்று ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செவ்வாழைப் பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.
மூல நோய் கூட கட்டுப்படும்.
எந்த ஒரு பழத்தையும் சமைத்த உணவோடு சேர்த்துச் சாப்பிடாமல், அது நன்கு செரித்த பின், தனியே சாப்பிட இலகுவாய் செரிக்கும். அதன் சத்து உடலில் சேரும். இந்த அடிப்படை செவ்வாழைக்கும் பொருந்தும். இதை உணர்ந்து சாப்பிட, இதன் பலன் நமக்கு கிட்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories