நன்மைகள் பல தரும் நுங்கு:

நன்மைகள் பல தரும் நுங்கு:
வெயில் கால சூட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமக்கு இயற்கை தந்த வரம் தான் பனைமரம். கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியை உடலுக்கு தேவையான நீர்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.நுங்கு ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை தருகிறது.
நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன.
எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். இதற்கு என்று ஒரு பருவம் உள்ளது. இந்த பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண்மப் பொருள் மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும்.
பனைவெல்லம், பனக்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம், என அனைத்துமே மருத்துவகுணம் நிறைந்தவை. நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண்டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, பாஸ்பரஸ்,கால்சியம்,துத்தநகம், சோடியம்,மக்னீசியம்,பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், ரிபோஃப்ளோவின் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் நிறைந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிடலாம்.
நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இரண்டுக்குமே நுங்கு மருந்தாகப் பயன்படுவது.மேலும் நுங்கை சாப்பிட்டடன் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
உடல் உஷ்ணத்தால் அவதி படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கும். ரத்தசோகை உள்ளவாகளுக்கு நுங்கு சிறந்த மருந்து.
நுங்கில் ஆந்த்யூசைன் எனும் இராசயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும்.
நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும்.அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.
நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.
நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்.
நாமும் நுங்கின் பயனை உணர்ந்து பயன்பெறுவோம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories