நாவல் பழச்சாறு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு கலந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும்.
சற்று பழுத்த பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியைத் தூண்டும் தன்மை கொண்டது இரைபை குடல் வலி நீக்கி சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள் குடற்புண் போன்றவை போக்க வல்லது.
பொடி செய்யப்பட்ட விதைகள் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது .நாவல் விதைகளில் அதிக அளவு புரதம் மாவுச் சத்து மற்றும் கால்சியம் உள்ளதால் விலங்குகளுக்கு தீவனமாக கொடுக்கப்படுகிறது. ரத்த சுத்தப்படுத்த நாவல் முக்கிய இடம் பெறுகிறது. மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.