பல நன்மைகளை அள்ளித்தரும் ஏலாதி சூரணம் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள்
1.ஏலக்காய் – 25 கிராம்
2.சுக்கு – 50 கிராம்
3.தாளிசபத்திரி – 80 கிராம்
4.சிருநாகப்பூ – 40 கிராம்
5.மிளகு – 20 கிராம்
6.இலவங்கம் – 10 கிராம்
7.கற்கண்டு – 100 கிராம்
செய்முறை
அனைத்தையும் முறைப்படி சுத்தம் செய்து அரைத்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். கற்கண்டை பொடித்து ஒன்று சேர்த்து சலித்து அனைத்தையும் நன்றாக கலந்து வைக்கவும்.
அளவு :
1 கிராம் முதல் 2 கிராம் வரை காலை இரவு உணவுக்கு பின் எடுக்கவும்
ஏலாதி சூரணத்தின் நன்மைகள் :
உடலில் வியாதி எதிர்ப்பு திறனை அதிகரித்து, பசியின்மை, உணவு செரிமான பாதிப்பினால் உண்டாகும் வாந்தியைப் போக்கி, செரிமானத்தைத் தூண்டும் தன்மை மிக்கது. காமாலை எனும் உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய வியாதிகளைத் தீர்க்கும் ஆற்றல்மிக்கது.
1.கர்ப்பிணிகளின் செரிமானத்திற்கு:
கருவுற்ற தாய்மார்களுக்கு உணவு செரிமானத்தை அளித்து, உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கும் ஏலாதி சூரணம், உடலில் ஏற்படும் கிருமித் தொற்றைப் போக்கக்கூடியது.
2.சத்துக்கள் கிடைக்க :
கருவுற்ற மூன்றாம் மாதத்தில் இருந்து ஏலாதியை தேனில் கலந்து, பெண்கள் உண்டுவர, பசியின்மை விலகி, உணவில் நாட்டம் அதிகரித்து, உடலுக்குத் தேவையான சத்துகள் கிட்டும். பசியைத்தூண்டி, உடல்நலம் காக்கும் ஏலாதி சூரணம், இதய வியாதிகளைப் போக்குவதில் அற்புத செயல்திறன் மிக்கது.
3.இதய பாதிப்புகள் போக்கும் :
சிறுங்கி பற்பம் எனும் சித்த மருந்துடன் ஏலாதி சூரணம் சேர்த்து சாப்பிட, தீவிர நிலை இதய வியாதிகள் பாதிப்புகள் நீங்கி, நலமுடன் வாழ முடியும்.
4.இதய அடைப்பு குணமாக :
இந்த மருந்தை முறையாக சாப்பிட, தற்காலத்தில் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய செய்யப்படும் ஆஞ்சியோ சிகிச்சையைக்கூட, தவிர்க்க முடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5.மேனி பளபளப்புக்கு :
உடல் எடையைக் குறைக்கவும், உடல் நிறத்தை மேம்படுத்தவும், ஏலாதி சூரணத்தை குளிக்கும்போது, உடலில் நன்கு தடவிக்கொண்டு, குளித்துவருவர். ஏலாதி பொடியை, நீரில் கலந்து, குளிக்கும் முன் உடலில், முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து, குளித்துவர, உடல் புத்துணர்வாகும், சருமம் பொலிவாகும். உடல் எடையும் குறையும்.