பிரசவித்த பெண்களுக்கு (FOR DELIVERIED LADIES).

பிரசவித்த பெண்களுக்கு (FOR DELIVERIED LADIES).

1.   இஞ்சிச்சுரசம் 30மிலியுடன்30மிலி தேன் கலந்து ஒருமுறை கொடுக்க பிரசவ அழுக்குகள் வெளியாகும்.சன்னி நிலை வராது.கருப்பை சுருங்கும். பால் சுரக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
2.  ஓமம்100,பெருங்காயம்25,அரத்தை10,சுக்கு50,மிளகு10 கிராம் அளவில் பொடித்து, பனைவெல்லம்200கிராம்,தேன், நெய் சேர்த்துப் பிசைந்து,5கிராம் தினம்2வேளை 2மாதம் சுவைத்துச் சாப்பிட்டுவர மேற்கூறிய பலன் கிட்டும்
3.   தண்ணீர்விட்டான் கிழங்கு நெய் 1தேகரண்டி தினம்3வேளை கொடுக்க தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்
4.   அமுக்கரா இளகம் 5கிராம் தினமிருவேளை 50மிலி பாலில்கொள்ள பால்சுரப்பு அதிகரிக்கும்
5.   அம்மான்பச்சரிசி சமூலத்தை எலுமிச்சையளவரைத்து,200மிலி பாலில் கொள்ள தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
6.   5கிராம் எள்ளை காலையில் சாப்பிட்டுவர பால்சுரப்பு அதிகரிக்கும் 7.   கல்யாணமுருங்கையிலையை தே.எண்ணையில் சமைத்துச் சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்                                               8.   5கிராம் வெந்தயத்தை வேகவைத்து கடைந்து 1தேகரணடி தேன் கலந்து தினம்3 வேளை சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்
9.   பப்பாளிக்காயை தோல்நீக்கி சமைத்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
10.  கோரைக்கிழங்கையரைத்து  மார்பில்பூச  பால் சுரக்கும்
11.  கீழாநெல்லி சமூலத்தை பாலிலரைத்துக் கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும்
12. தண்ணீர்விட்டான்கிழங்குச்சூரணம் 5கிராம் பசுநெய்யில் கலந்து தினமிருவேளை உண்டுவர இளைத்த உடல் பருக்கும்.பால் சுரப்பு அதிகரிக்கும்.நீர்க்கட்டு,நீர்க்கடுப்பு குணம் ஆகும்
13.  முருங்கைகீரையில் தேங்காய்பூ போட்டு அதிகம் சாப்பிட்டுவர பால் சுரப்பு அதிகரிக்கும்
14.  இலுப்பை இலைகளை மார்பில் வைத்துக்கட்ட பால்சுரப்பு மிகும்
15.  1படி நீரில் 1பிடி காட்டாமணக்கு இலையை காய்ச்சி,ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகளை மார்பில் கட்ட பால் சுரக்கும்.
16.  தாளிக்கீரை இலைகளை கொதிநீரிலிட்டு சற்று வெந்ததும் எடுத்து பிசைந்து எலுமிச்சையளவு காலை மாலை உண்டுவர பால்சுரப்பு மிகும்
17.  அரசவேர் கொழுந்து அல்லது விழுது கொழுந்து பசும்பாலிலரைத்துக் கரைத்து கொடுக்க பால் சுரக்கும்
18.  முத்தெருக்கன்செவி மூலத்தை பாலிலரைத்து புன்னைக்காயளவு 200மிலி பசும்பாலில் கொள்ள ஸ்தனம் பூரிக்கும்
19.  தரா இலை 5கிராம் ஓரிரு மிளகுடன் அரைத்துக்கொள்ள பால்சுரப்பு மிகும்
20.  நத்தைச்சூரி வேர்10கிராம் பசும்பாலிலரைத்து,கரைத்து,வடித்துக் குடிக்க தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும் 21.  பால்பெருக்கி இலையை அரைத்து துவையல் செய்து சாப்பிட பால் பெருகும். மலச்சிக்கல் தீரும்.    22.  சங்கிலை,வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு(20கிராம்)காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்துவர கர்பாயாச அழுக்குகள் வெளியேறி சன்னி,இழுப்பு வராமல் தடுக்கும்.
23.  தணணீர்விட்டான் கிழங்குசாறு 200மிலி,சர்க்கரை1தேகரண்டி கலந்து காலையில் பருகிவர தாய்ப்பால் சுரக்கும்
24.  ஆமணக்கிலையில் நெய் தடவி,அனலில் லேசாக வதக்கி இளம்சூட்டில் மார்பில் கட்ட தாய்ப்பாலதிகம் சுரக்கும்
25.  ஆமணக்கிலையை அரிந்து,து.பருப்பு சேர்த்து கீரை செய்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
26.  நொச்சிஇலையை கொதிக்க வைத்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும் 27.  2 தேகரணடி அமுக்கராசூரணம் பனங்கற்கண்டு கலந்து பாலில் உட்கொள்ள பிரசவகாலத்தில் ஏற்படும் உடல்அசதி நீங்கும்
28.  திருநீற்றுபச்சை விதையை (சப்ஜாவிதை) 200மிலி நீரில் ஊறவைத்துச் சாப்பிட பிரசவத்திற்குப்பின் ஏற்படும் களைப்பு நீங்கும்                                       29.  ஆமணக்கு எண்ணையை,தூய,மெல்லிய பருத்தி துணியில் ஊற வைத்துப்பற்றிட மார்புக்காம்புகளிலேற்படும் வெடிப்புகள்,புண்கள் குணம் ஆகும் 30.  கானாவாழைஇலையை அரைத்துக் கட்ட  படுக்கைப்புண் ,மார்புக்காம்பைச் சுற்றி வரும் புண்கள் ஆறும்
31.  நொச்சிஇலையை கொதிக்கவைத்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும் 32.  தினம் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருக தாய்பால் நன்கு சுரக்கும்.
33.  கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்துசாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும்.
34.  அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்
35.  ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம்காலையில் மட்டும் பாலில்கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

36.  அமுக்கிராங்கிழங்கு இலை கசாயம் காய்ச்சி பருக தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
37.  கோவை இலையை வெள்ளைப்பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு  வரத் தாய்ப்பால் பெருகும்.
38.  1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வரத் தாய்ப்பால் பெருகும்.
39.  வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.
40.  முருங்கை கீரையை பொரியல் செய்து சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும்.
41.  தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும்.
42.  அருகம்புல்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். 43.  அகத்தி இலையைச் சமைத்து உண்டு வரத் தாய்ப்பால் அதிகரிக்கும். 44.  குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வரத் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
45.  சிறிதளவு கேழ்வரகு மாவு எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினம் 2 வேளை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்கும்.
46.  அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும்.
47.  இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்ண தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
48.  ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
49.  அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
50.  சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். 51. தேன்15பங்கு,அமுக்கராங்கிழங்கின் ரசம் 10பங்கு,மிளகுரசம் 15பங்கு, மணத்தக்காளி ரசம் 25பங்கு கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.
52.  அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்ண தாய்ப்பால் சுரக்கும்
53.  நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம்  கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும்.
54. ஏலம்3பங்கு,திப்பிலி4பங்கு,அதிமதுரம்6பங்கு,ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும்
55.  இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினம் காலையில் உட்கொள்ள பால் அதிகமாக சுரக்கும் 56.  3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட, வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.
57.  முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும். 58.  ஆரைக்கீரையை சமைத்து உணவுடன் சாப்பிட தாய்பால் சுரப்பு நிற்கும்
59.   மல்லிகைப்பூ 20,மார்பில் வைத்துக் கட்ட பால் சுரப்பு நிற்கும்,மார்பக வீக்கம் குறையும்
60.  மல்லிகைபூக்களை அரைத்து மார்பில் பூச பால்சுரப்பு நிற்கும்
61.  அவலை வெந்நீரில் ஊற வைத்து,வெதுவெதுப்பாக மார்பில் கட்ட ,கட்டிய பால் வெளியாகும்
62. ஆமணக்கிலையை,ஆமணக்கெண்ணையில் வதக்கிக்கட்ட கட்டியபால் வெளியாகும்
63.  பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

Dr.S.SELVAKUMAR
9444648674

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories