மறந்து போன எண்ணெய்க் குளியல்!

மறந்து போன எண்ணெய்க் குளியல்!

இன்றைய தலைமுறையினர்க்கு வருகின்ற உடல் தொந்தரவுகளைப் போல், நம் முன்னோர்களுக்கு  நோய் வந்ததில்லை அதற்குக் காரணம் அன்றைய கோட்பாடான உணவு முறை, வாழ்க்கை முறை. அதில் எண்ணெய் குளியலும் அடக்கம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வாத, பித்த, கபம், இவை உடலில் இருக்க வேண்டிய சரியான அளவில் வைப்பதற்கு உதவுகிறது.

எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை சம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃபாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக் கொள்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலையையும் செய்கிறது.

எண்ணெய்க் குளியலில் கிடைக்கும் நன்மைகள்

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடல் முழுவதும் ரத்தவோட்டம் சீர் செய்யப்பட்டு உடல் உறுப்புகள் நன்கு செயல்பட உதவுகிறது. உடல் வெப்பத்தைச் சீராகப் பராமரிக்கும் பண்பு நல்லெண்ணெய்க்கு உண்டு. இதனால் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.

தற்போதைய அவசர உலகில், பலருக்கும் மன அழுத்தம், பரபரப்பு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இவற்றால் உடல் வெப்பமடையும். மூளையும் வெப்பமடையும் என்பதில் சந்தேகமில்லை. நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது மேற்கூறியவற்றால் ஏற்படும் நோய்கள், தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

பின்பற்ற வேண்டிய  விதிமுறை

எண்ணெய் தேய்த்து வெகுநேரம் காத்திருக்கக் கூடாது. 20 நிமிடம் முதல் நேரம் ஒரு மணி நேரம்வரை, காலை இளம் வெயிலில் நின்ற பிறகு குளிக்கலாம்.

தலை முதல் உள்ளங்கால் வரை நன்கு பரவலாக எண்ணெயைத் தேய்க்க வேண்டும். உடல் உறுப்புகள், மூட்டு இருக்கும் இடங்களில் சற்றுப் பொறுமையாக வட்ட வடிவில் தேய்த்தால், உள்ளுறுப்புகள் வெப்பத்தைச் சரிவரப் பராமரிக்கப்படும். மேலும் மூட்டுகளுக்கு நெய்ப்புத் தன்மையையும் கொடுக்கும். வீட்டில் எண்ணெய் தேய்த்த பிறகு குளிப்பதற்கு ஏற்ப வெந்நீரில் மட்டும் குளிக்கவும்.

ஆண்கள் ஞாயிறு செவ்வாய் அன்று எண்ணை தேய்த்து குளிக்கக்கூடாது

பெண்கள் சனி ஞாயிறு அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது

எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று பகல் உறக்கம் கூடவே கூடாது. ஏனென்றால் உடலில் உள்ள நவதுவாரங்களின் வழியாக அதிகரித்த உடல் சூடு வெளிவரும், முக்கியமாகக் கண்களின் வழியாக வரும். இதைப் பகல் தூக்கம் தொந்தரவு செய்யும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அன்று குளிர்ச்சியான உணவு வகைகளான தயிர், குளிர்பானம், அசைவ உணவுகள், போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் பதிலாக மிளகு ரசம்  மற்றும் காய்கறி உணவுகள்போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

காலையில் 6 to 7 மணிக்குள் குளிப்பது நலம்

எண்ணை தேய்த்து குளிக்க சீயக்காய் அல்லது அரப்பு என்கிற உசிலை பொடி பயன்படுத்துதல் அவசியம்

எந்த எண்ணெய் தேய்க்க வேண்டும்

உடலில் தேய்ப்பதற்கு  சுத்தமான நல்லெண்ணெய் & விளக்கெண்ணெய் பயன்படுத்த வேண்டும்

அதிகப்படியான உடல் வெப்பம் இருக்கும் நபர்கள் மட்டும் விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும்
உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் இருப்பது அவசியம்

இந்த எண்ணெயின் குளிர்ச்சி சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், நல்லெண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து மிதமான சூட்டில் 60 விநாடி அடுப்பில் சுட வைத்துத் எண்ணெயய் வடிகட்டி தேய்த்துக் 20 நிமிடம் கழித்து குளித்தால் குளிர்ச்சி மிகக்குறைவாக இருக்கும்.

நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து வாரம் இருமுறை எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

எண்ணெய் குளியல் தரும் நன்மைகள்

# முடி உதிர்தலைக் குறைக்கும்

# பார்வை பலப்படும்

# முதுமையைத் தாமதப்படுத்தும்

# ஆயுட்காலத்தைக் கூட்டும்

# தோலைப் பளபளப்புடன் வைத்திருக்க உதவும்

# உடலில் உண்டாகும் கழிவை வெளித்தள்ளும்

# உள்ளுறுப்புகள் தங்களுடைய செயல்களைச் சிறப்பாகச் செய்யும்

# மனதை நல்ல நிலையில் வைத்திருக்கும்

# முறையான தூக்கத்தைத் தரும்

# உடலை மென்மையாகவும் நோய் எதிர்ப்பற்றாலுடனும் வைத்திருக்கும்

# மூட்டுக்கு இணைப்புகளில் உண்டாகும் தேய்மானத்தைக் குறைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories