முடி உதிர்வைக் கட்டுப்படுத 1 லட்டு சாப்பிட்டு வந்தாலே போதும்

🟠 முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, அடர்த்தியான நீளமான முடியை வளர செய்ய, சருமம் பளபளப்பாக மாற, இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள, தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டு வந்தாலே போதும்

தேவையான பொருட்கள்:

எள்ளு – 1/2 கப், ஆளி விதை – 1 கப், அவல் – 1/2 கப், தண்ணீர் – 1/2 கப், வெல்லம் – 1 கப், ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன். (எல்லாப் பொருட்களையும், தண்ணீரை கூட ஒரே கப்பில் தான் அளக்க வேண்டும்.) – முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அந்த கடாய் நன்றாக சூடானதும் எள்ளு – 1/2 கப் போட்டு படபடவென பொறிய வைத்து இந்த எள்ளை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்தது அதே கடாயில் ஆளி விதை – 1 கப் போட்டு படபடவென பொரிந்து வரும் அளவிற்கு வறுத்து இதையும் எள்ளுடன் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள். ஆளி விதை என்பது ஆங்கிலத்தில் flax seeds என்று சொல்லுவார்கள். அடுத்து அதே கடாயில் – 1/2 கப் அளவு பாதாமை போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து இந்த பாதாமை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மிக்ஸி ஜாரில் ஆறிய பாதாமை போட்டு பொடியாக அரைத்து ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். – அதன் பின்பு அதே மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்து இருக்கும் எள்ளு ஆளிவிதை இந்த 2 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து இதையும் அரைத்த பாதாம் பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நமக்கு அரைத்த எள்ளு, பாதாம், ஆளி விதை இந்த மூன்றும் தயாராக உள்ளது. இது ஒரு பவுலில் அப்படியே இருக்கட்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, 1 கப் அளவு வெல்லம் போட்டு, கரைத்து வடிகட்டிய வெல்லக் கரைசலை, மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 1 ஸ்பூன் ஏலக்காய் பொடியை போட்டு கொதிக்கவிடுங்கள். வெல்லக் கரைசல் நன்றாக கொதித்து பிசுபிசுப்பு தன்மை வரும். லேசாக ஒரு கம்பிப் பாகு பதம் வந்ததும், இந்த வெல்லக் கரைசலில் அரைத்து வைத்திருக்கும் பொடியை கொட்டி நன்றாக கலந்து விட்டு, இறுதியாக ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்தக் கலவை கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உங்களுக்கு தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து, ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் 10 லிருந்து 15 நாட்கள் கெட்டுப்போகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு லட்டு சாப்பிட்டுவர உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் நம்ப முடியாத வித்தியாசத்தை காணலாம். ஒரு நாள் இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு பாருங்கள். வித்தியாசம் உங்களுக்கே தெரியும். –

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories