வெப்பாலை இந்திய மண்ணை தாயகமாகக் கொண்டது.
சாலையோரங்களிலும் காடு மலைப் பகுதிகளையும் சாதாரணமாகக் காணக்கூடிய ஒரு தாவரம் வெப்பாலை.
வெப் பாலை மரம் சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
பீன்ஸ் போன்ற காய்கள் கொத்துக் கொத்தாக பெற்றிருக்கும்.
இலைகளில் 8 முதல் 15 சென்டி மீட்டர் நீளத்திற்கு வேப்பமரத்தின்இலை அமைப்பினை ஒத்திருக்கும்.
இவற்றின் இலை ,பட்டை ,வித்து ஆகியன மருந்தாக பயன் தரவல்லது.
உஷ்ண சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக்கூடியது.
மிகுதியான பால் உள்ள மரமான வெப் பாலை மிகுதியான மருத்துவ பலன்களை கொண்டது. இது மஞ்சள் காமாலையை போக்கும் உடலில் வியர்வை தூண்டிய வெப்பத்தை தனித்து காய்ச்சலை குணப்படுத்த கூடியது .சரும நோய்கள் உடல் சூடு போன்ற நோய்களைத் தடுக்கும் திறன் கொண்டது .பேதி மற்றும் சீதபேதிக்கு சிறந்த மருந்து ஆசனவாய் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பெருமல் பித்த சம்பந்தமான நோய்களை போக்குகிறது .கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலப்படுத்தக் கூடியது. உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.