வேலிப்பருத்தி அல்லது உத்தாமணி

வேலிப்பருத்தி அல்லது உத்தாமணி இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பாலுள்ள பிசுபிசுப்பான ஏறுகொடி இலை வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை வாந்தி உண்டாக்குதல் கோழையகற்றுதல் முறை நோய் நீக்குதல் இசிவு போக்குதல் ஆகிய குணங்களை உடையது காணாக்கடி அரிப்பு தடிப்புக்கு இலைச்சாறு தடவலாம் இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் கீல் வாதம் முடக்கு வாதம் வாதக் கடைச்சல் இடுப்புவலி முதலியன குணமாகும் சாக்கு பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளம் சூட்டில் பற்றுப் போட வாதவலி வீக்கம் குணமாகும் யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40 அல்லது 50 நாட்களில் குணமாகும் வேரை உலர்த்தி தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும் பூச்சி கிருமிகள் சாகும் இலைச்சாற்றில் ஏழுமுறை மிளகை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் குழந்தைகளின் செரியாமை வாந்தி மந்தம் மாந்தம் இழுப்பு கைகால் சில்லிட்டுப் போதல் ஜுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்

நன்றிASNசாமி

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories