⚡சிறுநீரகத்தில் கல் வர ஏன்ன காரணம்?⚡

⚡சிறுநீரகத்தில் கல் வர ஏன்ன காரணம்?⚡

🌷-சிறுநீரகக் கல் (கீட்னி) பிரச்சனை‌ என்பது இன்றைய சூழலில் சிறியவர்,
பெரியவர் என அனைவருக்குமே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.ஆனால் இது உருவாக காரணம் உறுதியாக கூற முடியாவிட்டாலும் இயற்கையாக உடல் பலவீனம் கொண்டவர்கள் தவறான உணவு பழக்கம் போதுமான நீர் அருந்த அருந்தாமை போன்ற காரணங்களால் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால்,உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்பது கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள். இது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

⚡அமிலத்தால் உருவாகலாம்🙏

🌷-யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். சில குறைபாடுகள் இந்த அளவை தாண்டும்போது. மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும் அப்போது அதற்கு கற்களாக படிவதுண்டு .

🌷-நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ உணவாகவே எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்த்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர்ப்பெருக்கி சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல்கள் உருவாகி கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

⚡அறிகுறிகள்⚡

🌷- சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்க முடியாத வலி ஏற்படும் கடுமையான வியர்வை ஏற்படும் சிறுநீர் வெளியேறும்போது சிக்கல் உண்டாகும் ஒவ்வொருக்கு ஒரு முறை சிறுநீரகத்தில் (கிட்னி) ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால் அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.

⚡கடைப்பிடிக்க வேண்டியவை⚡

🌷- தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.

🌷- தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.

🌷- அதிகமான பழங்கள்,காய்கறி, பருப்பு; ஆகியவை உட்கொள்ளல் கல் உருவாகுவதை தடுக்காலாம்.

🌷-அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

🌷-பாலில் தாயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருபாபதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

🌷- வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

🌷- எண்ணெயில் பொரிக்கும்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories