🌾🌾🌾 சிவப்பு அரிசி வேண்டாம் வெள்ளை அரிசி வேண்டும் 🌾🌾🌾

🌾🌾🌾 சிவப்பு அரிசி வேண்டாம் வெள்ளை அரிசி வேண்டும் 🌾🌾🌾

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

(இது மிக முக்கியமான பதிவு அனைவருக்கும் பகிர வேண்டுகிறேன்)

பொதுவாகவே நம்ம அறல் கழனி யில் விளையிற அரிசி தேவை என வாங்கறவங்க 80% பேர் சிகப்பு அரிசி வேண்டாம் சன்ன ரகமா பாரம்பரிய வெள்ளை அரிசி தாங்க என கேட்கிறது வாடிக்கை!!

எனக்கு மட்டும் தான் இந்த நிலமையா என்றால் ?? இங்க இருக்கற 70% இயற்கை வழி விவசாயிகளோட நிலைமை அதே நிலை தான்!!

வானம் பொளந்துகிட்டு கொட்டின மழையால கிணத்துல தண்ணீர் பெருக்கெடுத்து இருக்கு!!

அடுத்த போகம் நெல் சாகுபடி தவிர வேற சாகுபடிக்கு மண்ணில் உள்ள ஈரம் இடமளிக்காது வானமும் விடாது போலிருக்கு.. ( மாசம் மூனு மழை பேஞ்சுடுது இந்த வருசம்)

அப்போ இரண்டாவது போக சாகுபடிக்கு நமக்கு பாரம்பரிய ரகங்கள் பல நெல் சிகப்பு அரிசியா தான் இருக்குது!!

ஆனா அந்தளவு சிகப்பு அரிசிய பயிர் வைச்சா எப்படி விக்கறது ?? இதான் விவசாயிகளோட கேள்வியா ?? இருக்கு!! இன்றைய அளவில்!!

இப்போ அதனால நிறைய பேர் bpt , delux பொன்னி விதைக்கலாமா என்று என்கிட்ட கேக்கறாங்க!!

இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு நம்மாழ்வார் பேச்ச கேட்டு பாரம்பரிய ரகமெல்லாம் மீட்டு கொண்டுவந்து இப்போ விக்க முடியலன்னு நாம ஒட்டு ரகத்துக்கு திரும்பறது நல்லாயில்ல!!

இதுக்கு தீர்வு தான் என்ன??

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

மக்களிடம் நாங்கள் வேண்டுவது

என்னோட இரண்டு வயசு பொண்ணு கருங்குருவை சிகப்பு அரிசி சாப்பிடுது !! உங்களால முடியாதா??

நல்ல சத்துள்ள அரிசிங்க… எல்லா சிகப்பு அரிசிலையும் !!
Protein, magnesium, phosphorus, fiber, iron இப்படி பல சத்துக்கள் இருக்கு !!

வெள்ளையா இருக்கற சக்கைய சாப்பிடறதுக்கு சிகப்பு அரிசிய சாப்பிடுங்க!!

ஒரு வாரம் கஷ்டமா இருக்கும் பிறகு எளிமையா இருக்கும்!!

வீட்ல இருக்கிறவங்களுக்கு சொல்லி புரிய வைங்க

அதே மாதிரி unpolished rice தான் சாப்புடனும் இல்ல!! Semi polished rice மிக எளிமையா இருக்கும் சாப்பிட!!

Unpolish அரிசி வாரம் ஒரு முறை இரண்டு முறைக்கு மேல சாப்பிட முடியாது.. ஆனா செமி பாலிஷ் அரிசி தினமுமே சாப்புடலாம்!!

பாதி சத்து கிடச்சாலும் தினமும் சாப்பிடறதால முழு சத்து கிடைக்க ஆரம்பிச்சிடும்!!

அதனால் செமி பாலிஷ் அரிசி வாங்கி சாப்பிடுங்க!!

ஏன் நாம உரல குத்தினா கூட பாதி வெள்ளை பாதி சிகப்பு தாங்க இருக்கும்!!

பூங்கார் னா பெண்களுக்கு தான் நல்லது , குள்ளக்கார் னா குண்டா இருக்கறவங்கதான் சாப்பிடனும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைங்க!!

அவங்களுக்கு கூடுதல் சத்து கிடைக்கும் அவ்வளவுதானே தவிர!!
எல்லாரும் எல்லா அரிசியும் சாப்பிடலாம்!!

அதே போல 10 கி மாதிரி ஒரு 5 ரக அரிசி வாங்கிக்கோங்க!! தினம் ஒரு அரிசி சாப்பிடலாம் !!

பாரம்பரிய அரிசி என்று வெள்ளை அரிசி மட்டுமே வேண்டும் சொல்லாதீங்க.. நம்ம பாரம்பரியமே சிகப்பு அரிசி சாப்பிட்டு வளர்ந்தவங்க தான்!!

விவசாயிகளுக்கு ஒரு வேண்டுகோள்

நாம் முடிந்த வரையில் semi Polish அரிசிய promote பன்னலாம்!! Unpolish அரிசி practical a தினமும் சாப்பிடுவதற்கு ஏற்றதா மக்கள் பார்வையில் இல்லை!!

அதே போல எந்த மேடையில் பேசினாலும் famous ஆன 4 ரக நெல்கள் பற்றி மட்டும் பேசாதீங்க 100 ரகங்கள் மேல இருக்கு ஆனா நம்மகிட்ட புழக்கதுல 15 ரகங்களுக்குள்ளாத்தான் அரிசி இருக்குது , அதனால மற்ற எல்லா ரகத்தை பற்றியும் மீடியாவுல பேசுங்க

முடிந்தளவு பாரம்பரிய ரகங்கள் பயிரிட்டு மக்களின் மனம் கவர எத்தனிப்போம்!!

இயற்கையோடு இணைந்து இயன்ற வேளாண்மை செய்வோம்

-உழவர் வ.சதிஸ்.,
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
மேல்மலையனூர்,
8940462759

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories