அன்புள்ள விவசாயிகளுக்கு வணக்கம்
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கவனத்திற்கு….
உங்கள் கால்நடை கொட்டகை
தீவனத் தொட்டிகளை
பாதுகாப்பாக வைத்திருங்கள்
குறிப்பாக….. தற்காலத்தில் உலர்தீவனமான வைக்கோல் பண்டல்களாகவே உருட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இது இயந்திரம் மூலம் பண்டல் செய்யப்படுவதால் அந்த பண்டல்களில்
இறந்துபோன சிறு பாம்புகள்
தேள்
பூரான்
சிறுசிறு குச்சிகள்
இரும்புக்கம்பி
பிளாஸ்டிக் கயிறுகள்
மீன்வலை கயிறுகள்
போன்றவை அதில் கலந்து இருந்தாலும் அதை இயந்திரங்கள் பிரிக்காமல் அப்படியே வைக்கோல் களோடு சுருட்டி பண்டல் ஆக்குகின்றன
அதை அப்படியே எடுத்து நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கின்றோம்.
இதனால் அந்த தீவனத்தில் இருக்கின்ற ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருட்கள் இருப்பதை அறியாமல் கால்நடைகள் தீவனத்தை சாப்பிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் வரை செல்கின்றது.
ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்
மாட்டுத்தொழுவம்
தீவனங்கள்
தீவனத்தொட்டி
அவற்றை கவனமாக கையாளுங்கள் .
அதேபோன்று கம்பெனிகளில் இருந்து வாங்கி போடுகின்ற அடர் தீவனங்கள் அதை நீங்கள் தீவனத் தொட்டியில் தண்ணீரில் கலந்து கொடுக்கும் பொழுது அரிசி தவிடு
கோதுமைத் தவிடு
மற்றும் தீவனங்களை தண்ணீரில் கலந்து கொடுக்கும் பொழுது நமது கையை தண்ணீரில் விட்டு நன்றாக கலக்கி ஏதாவது பொருட்கள் இருக்கின்றனவா என்று சோதித்த பிறகு கால்நடைகளுக்கு உணவாக தரவும் .
இதனால் அதில் ஏதாவது
சிறு சிறு கம்பிகள்
ஆணிகள்
ஊசிகள்
மற்றும்
இரும்பு பொருட்கள்
போன்றவை கலந்து இருந்தாலும் நாம் அவற்றை கண்டுபிடித்து எடுக்க உதவியாக இருக்கும்
பிரேத பரிசோதனையின்போது கண்டரியப்பட்ட
மீன்வலை நரம்பு;
பட்டுநூல் கயிறு
மற்றும்
தூண்டில் ஊசி.
மாட்டுத் தொழுவம் மற்றும் தாழி மற்றும் தீவனம் சரவர பராமரிக்காததால் மாட்டுத் தீவனத்தில் எதிர்பாராது கலந்து உள்ளே போய் உணவுப்பாதை கிழிந்து இறந்த மாட்டில் இவை இருந்தன.
நோய் வெளியே இருந்து வருவதில்லை.
நம் கவணக்குறைவாலேயே வருகிறது.
தகவல்
மணி கணேஷ், கால்நடை மருத்துவர் ,
கொளத்தூர்,
சேலம் மாவட்டம்.