மரக்கன்றுகள் நடும் போது குறைந்தபட்சம் 4 அடி உயரம் இருக்க வேண்டும் .அத்தகைய மரக்கன்றுகள் தான் பக்குவப்பட்ட மரக்கன்றுகள் எனப்படும்.
2o2 அடி என்ற சதுரம் 2 அடி ஆழம் உள்ளம் செடியை எடுத்து ஒரு பங்கு மணலை முதலில் கொட்ட வேண்டும். அதற்குமேல்2 பங்கு செம்மண் 3 பங்கு விட்டு ஒரு கைப்பிடி அளவு வேப்பம் புண்ணாக்குபோட வேண்டும். தயார் செய்யப்பட்ட குழியை ஆறு மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். இதனால் குழியில் வெப்பம் வெளியேறி செடி பசுமையாக இருக்க உதவும். இவ்வாறு தயாரானகுழியில் மரக்கன்றுகளை காலை அல்லது மாலை வேளையில் தான் நாட வேண்டும் .வழக்கம்போல மரக் கன்று நட்டவுடன் தண்ணீர் ஊற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு செலவு கிடையாது .பழம் தரும் மரங்களுக்குப் பராமரிப்பு தேவைப்படும் . இதில் 2 அல்லது 3ஆண்டுகளில் பயனளிக்கதொடங்கிவிடும்.
இதனால் பணம் தரும் மரங்கள் பயனளிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகும். இந்த மரங்கள் எவ்வளவு உயரமாக வளர்கிறது அவ்வளவு பணமாக தரும். இந்த மரங்களின் கிளைகளை வெட்டி விட்டு நேராக வளர செய்தாள் தண்டு தடித்து தரம் உயர்ந்ததாக அமையும். இத்தகைய மரக்கன்றுகளை நட்டு நம்முடைய வாழ்வாதாரத்தை அதிகரித்து இயற்கையை பாதுகாப்போம்.