ஆண்டுதோறும் மரம் ஒன்றுக்கு 50 கிலோ தொழு உரம் இடவேண்டும். பொட்டாஷ் உரத்தில் பத்தியை ஆடி மாதத்திலும் மீ தியையும் மற்ற உரங்களோடு சேர்த்து இடவேண்டும். இதிலுள்ள பொட்டாஷியம் மற்றும் குளோரின் வறட்சியை தாங்க உதவும்.
மரம் ஒன்றுக்கு 100 கிலோ கரம்பை அல்லது வண்டல் மண் நீர் பற்றாக்குறை அதிகமாகும்போது 3 அல்லது 5 அடி மட்டைகளை அகற்றிவிடலாம் .கோடையில் தென்னந்தோப்பில் உழவு செய்வதை தவிர்க்கலாம்.
பருவ மழைக்கு முன்பாக மரத்தைச் சுற்றி 6 அடி அளவிற்கு 100 கிராம் சணப்பு விதைகளை விதைப்பதற்கு முன்பு மடக்கி விட வேண்டும்.
காய்ந்த 15 முதல் 20 தென்னை மட்டைகளை மரத்தை சுற்றி வைத்து மண் போர்வை அமைக்கலாம் .தென்னை மரத்தை சுற்றி 6 அடி விட்டத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் முட்டைகளை வைக்கலாம். இவை ஒவ்வொன்றுக்கும் அதன் எடையைப் போல ஆறு மடங்கு நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டது. கொடிமரத்தை சுற்றி 2 அல்லது 3 மீட்டர் உயரத்திற்கு சுண்ணாம்பு பூசலாம்.