பயிர்களுக்கு ஏற்றவாறு மண்புழு உரம் இடுதல்

மலர் வகைகளுக்கு

குறுகிய கால மலர் வகைகளான செவ்வந்தி, மரிக்கொழுந்து, வாடாமல்லி, கோழிக்கொண்டை, போன்றவற்றை அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

நீண்டகால மலர் வகைகளான மல்லிகை, ரோஜா, காக்கட்டான், முல்லை, சம்பங்கி, கனகாம்பரம், அரளி, போன்றவற்றிற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடி ஒன்றுக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடவேண்டும்.

மக்காச்சோள பயிருக்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.பிறகு 40 நாள் கழித்து 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

கடலை, வெங்காயம் பயிருக்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் பிறகு இரண்டாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரம் இடலாம். மூன்றாம் களை எடுத்தவுடன் 125 கிலோ மண்புழு உரத்தை இடலாம்.

மரவள்ளி கிழங்கு பயிருக்கு

அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் மற்றும் 90 நாள் கழித்து 50 கிலோ மண்புழு உரம் 150 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரம் இடலாம்.

வெற்றிலைப் பயிருக்கு

கொடி தூக்கிய 60ஆம் நாளில் கொடி ஒன்றுக்கு கால் கிலோ மண்புழு உரம் அதன் பிறகு 100 நாள் கழித்து கால் கிலோ மற்றும் 150 நாள் கழித்து கால் கிலோ 200 நாள் கழித்து கால் கிலோ மண்புழு உரம் இடவேண்டும்.

மிளகாய் கத்தரி பயிருக்கு
அடியுரமாக ஏக்கருக்கு 250 கிலோ மண்புழு உரம் மற்றும் 60 நாள் கழித்து 250 கிலோ மண்புழு உரத்தை மூன்று முறை பிரித்து இடவேண்டும்.

மண்புழு உரத்தை அதிகம் இட்டாலும் தவறில்லை. பயன் கிடைக்கும் .

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories