“குறைந்த முதலீடு, நீண்டகாலப் பயன்” இதுதான் மாடித் தோட்டத்தின் சிறப்பம்சம்……

மலர்களைப் பார்த்து வளர்ந்தவருக்கு, இயற்கையின் மேல் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பூச்செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நர்சரி பண்ணைகள் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றின.

மல்லி, ஜாதிமல்லி, முல்லை போன்ற செடிகளின் நாற்றுகளை உற்பத்தி செய்யும் பண்ணைகளை உருவாக்கல்லாம்.

பண்ணையில வருடத்துக்குக் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் நாற்றுகள் வரை விற்பனையாகும். பூச்செடிகளோட மட்டும் நின்றுவிடாமல் இதோடு தொடர்புடைய மத்த விஷயங்களையும் பண்ணலாம். வீட்டுத் தோட்டங்களிலும் கவனத்தைத் திருப்பலாம்.

பூச்செடிகளின் நாற்றுகளோடு பயனுள்ள மூலிகைச் செடிகள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றையும் இணைக்கலாம்.

“இன்னைக்கு நிறைய பேருக்கு மாடித் தோட்டம் அமைக்கிறது ஃபேஷனா இருக்கு. ஆர்வமா செடிகளை வாங்கிட்டுப் போவாங்க. ஆனா, அதை சரியாப் பராமரிக்காம சாக விட்டுடுவாங்க. அதனால உண்மையிலேயே ஆர்வம் இருக்கறவங்க மட்டும் மாடித்தோட்டம் அமைக்கறதுக்கான கருவிகளையும் செடிகளையும் வாங்கி வளர்க்கலாம்.

மாடித் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களை மாடித் தோட்டம் அமைப்பது, செடிகளைப் பராமரிப்பது போன்றவற்றை தெரிவது அவசியம்.

“குறைந்த முதலீடு, நீண்டகாலப் பயன். இதுதான் மாடித் தோட்டத்தோட சிறப்பம்சம். செடி வளர்க்கிற பைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் அனைத்தையுமே எளிதில் கிடைக்கும்.

பச்சை மிளகாய், தக்காளி, கத்திரி, வெண்டை போன்ற காய்கறிச் செடிகளுடன் தினசரிப் பயன்படுத்தக்கூடிய மூலிகைகளான துளசி, ரணகள்ளி, ஓமவள்ளி, வல்லாரை, தூதுவளை போன்ற செடிகளையும் பயன்படுத்தலாம். பல வகையான கீரை விதைகளும் பயன்படுத்தலாம்.

பூச்சிக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்களின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழியாக மாடித் தோட்டம் இருக்கிறது. தொடர்ச்சியான கவனிப்பு இருந்தால் மாடித் தோட்டம் எப்போதும் பசுமையுடன் இருக்கும்.

நூறு சதுர அடியில் கிட்டத்தட்ட நாற்பது செடிகளை வளர்க்கலாம். நிழல் வலை, சொட்டு நீர்ப்பாசன அமைப்பு, நாற்றுகள், விதைகள் இதுக்கெல்லாம் சேர்த்து ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

பலர் சோம்பலில் செடிகளுக்குப் போதுமான இடைவெளியில் தண்ணீர் விட மாட்டாங்க. அதுதான் செடிகள் வாடி போவதற்குக் காரணம்.

ஆரம்பத்துல செடிகளுக்காக நேரம் செலவிடுறது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் பலனுக்கு முன்னால எதுவுமே பெரிசா தோணாது.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories