நீங்களும் அமைக்கலாம் மாடித்தோட்டம்

ஆரோக்கியத்துக்கு அடிப்படையாக இருப்பது நல்ல சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள். இன்றைக்குச் சந்தைக்கு வரும் பெரும்பாலான காய்கறிகள் பூச்சிக்கொல்லி விஷம், ரசாயனங்கள் பயன்படுத்திச் சாகுபடி செய்து விளைவிக்கப்படுபவையே. நாடு முழுவதும் இயற்கை விவசாயம் செய்தால் நஞ்சில்லாத காய்கறிகள் கிடைக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. இயற்கையான காய்கறிகளை விளைவிக்க கைவசம் இருக்கிற எளிமையான தீர்வு, வீட்டில் விவசாயம் தொடங்குவதுதான் என்கிறார் .

மாடித்தோட்டம்
மாடியோ வீட்டைச் சுற்றி இருக்கும் காலியிடமோ எங்குவேண்டுமென்றாலும் தோட்டம் அமைக்க முடியும். தோட்டம் அமைப்பதற்கு அடிப்படையானது ஆர்வம். இந்த ஆர்வம் இருந்தால்போதும் நிச்சயம் ஒரு தோட்டம் எங்குவேண்டுமென்றாலும் உருவாகி விடும். மாடித்தோட்டத்தில் என்னவெல்லாம் விளைவிக்கலாம்… கீரைகள், காய்கறிகள், மலர்கள் முதலிடத்தில் வருகின்றன. அடுத்து மூலிகைகள், பழமரங்கள், கொடிவகை காய்கறிகளையும் சாகுபடி செய்யலாம் என்கிறார் .

வீட்டைச் சுற்றியுள்ள காலி இடங்கள் என்றால் மரங்கள், பழமரங்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். இப்படி வயலில் விளையக்கூடியவற்றில் பாதிக்கும் மேற்பட்டவற்றை வீடுகளிலும் வளர்க்கலாம். வீட்டு மொட்டை மாடி, படிக்கட்டுகள், பால்கனிகள், வீட்டின் முன்புறம், பின்புறம் என் சூரியஒளி படக்கூடிய அனைத்து இடங்களும் செடிகள் வளர்க்க ஏதுவாக உள்ளது .

மாடித்தோட்டம்
விதைகள், வளர்ப்பதற்கான ஊடகம் (பைகள், தொட்டிகள் போன்றவை), மண், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு செடிகளை வளர்க்கலாம். பராமரிப்புக்கும் பல வழிகள் இருக்கின்றன. வேப்பெண்ணெய், புளித்த தயிர் ஆகியவற்றைக் கொண்டே பூச்சிகளை விரட்டலாம். வீட்டில் மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையே உரமாகவும் பயன்படுத்தலாம். இப்படி மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்டுகிறது வீட்டுக்குள் விவசாயம்’ என்ற தலைப்பில் நேரலை ஆன்லைன் பயிற்சியை நடத்த இருக்கிறது.

இந்தப் பயிற்சியை மண்புழு விஞ்ஞானியும் மாடித்தோட்ட வல்லுநருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் வழங்கவுள்ளார். மண்புழு ஆராய்ச்சியாளராக மட்டுமே அறியப்பட்ட பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் இன்னொரு முகம் வீட்டுத்தோட்டம். வீட்டிலேயே மண்புழு உரம் தயார் செய்து ஒரு தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். தேவைப்படுபவர்களுக்கு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். வீட்டுத்தோட்டத்தால் கிடைக்கும் விளைபொருள்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகம் பேசி வருகிறார் .

சுல்தான் இஸ்மாயில்

.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories