மாடிதோட்டம்

தேவையான பொருட்கள்

grow bags அல்லது தொட்டி

அடியுரமாக இட மணல் , தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண் , வேப்பெண்ணை ,பஞ்சகாவியம்

நடுவதற்கு தேவையான தண்டு குச்சிகள்

நீர் தெளிக்க உதவும் பூ வாளிதெளிப்பான்

பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்.

தொட்டிகள்

தேங்காய் நார் கழிவு உரம், மாட்டுச்சாணம் ஒரு பங்கு சமையலறைக் கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு இரு தொட்டியை நிரப்பலாம்.அதிக ஆண்டு பலன் தரக்கூடியது அடி உரம் அதிக சத்துக்கள் இயற்கை உரமாக இருந்தால் நல்லது இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. பத்து நாள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும் .இது கொடிவகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் ஒரு கலவையை நிரப்ப வேண்டும்.

விதைத்தல்
நோய் தாக்காத செடிகளிலிருந்து தண்டுக் குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும் .ஒரு பையில் 2 தண்டு குச்சி வரை ஊன்றலாம். நடுவதற்கு முன்பு சாணிப்பால் இல் நனைத்து நடவு செய்யலாம்.

நீர் நிர்வாகம்

குச்சிகளை ஊன்றி உடன் நீர் தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் ஊற்ற வேண்டும். தென்னை நார்க் கழிவை பயன்படுத்துவதாலும் இயற்கையாகவே தண்ணீரை தக்கவைக்கும் தன்மை கொண்டிருப்பதால் ஒரு முறை கோடை காலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும்.

துகள்கள் ஒட்டிக்கொண்டாள் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை

இதற்கு இயற்கை உரங்களை மட்டுமே அளித்து சரியான பராமரித்தால் அதிகபட்சமாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. காய்கள் முற்றி விடாமல் சரியான பருவத்தில்2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories