மாடித்தோட்டத்தில் வளர் ஊடகத்தில் எதை வளர் பொருளாக பயன்படுத்தலாம்?

மாடி தோட்டத்தில் பைகளில் வளர் ஊடகமாக 1:1, சதவீதம் நிலையில் மண்புழு உரம் மற்றும் தென்னை நார் கழிவை பயன்படுத்துவதே சிறந்தது.

ஏனென்றால் இதன் எடை குறைவு மற்றும் நீண்ட நாட்கள் ஈரத்தை தாங்கும் தன்மை உடையது.

தீவனப் பயிர் விதைகள் நேர்த்தி செய்வது எப்படி?

விதைகளை 8oo சென்டிகிரேடு வெப்பநிலை வெப்பநிலையில் வெந்நீரில் 5 நிமிடங்கள் பின்னர் குளிர்ந்த நீரில் பத்து மணி நேரம் ஊறவைத்து பின்பு உலர வைத்து விதைக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.

வயலில் மண்ணையும் சோதனைக்கு எப்படி எடுக்க வேண்டும்?

ஒரு வயலில் குறைந்தது 5 அல்லது 10 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாக கலந்து தண்டு வேர் கல் போன்றவற்றை அப்புறப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்பு மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி மண்ணை நன்றாக கலந்து சுமார் அரை கிலோ அளவிலான மண்ணை பரிசோதனைக்கு கொண்டு வர வேண்டும்.

பிரண்டை கரைசல் எப்படி தயாரிப்பது?

பிரண்டை கரைசல் தயாரிக்க 3 கிலோ பிரண்டை மூன்று கிலோ சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ புகையிலை மற்றும் நாட்டு மாட்டுக் கோமியம் 10 லிட்டர் ஆகியவை தேவை.பிரண்டை கற்றாழை புகையிலை ஆகியவற்றில் நங்கு உரலில் இட்டு இடித்து அதை 10 லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊறவைத்து மூன்று நாட்கள் காலை மாலை என இருவேளையும் கலக்கிவிட்டார் கரைசல் தயாராகிவிடும்.

இதை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வீதமும் கலந்துவிடுவதால் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

சி னை பசுவிற்குஎப்படி தீவனம் அளிக்கவேண்டும்?

சினை பசுவிற்கு சினைப்பருவத்தில் கடைசி மூன்று மாதங்களுக்கு 6 முதல் 8 கிலோ வரை உலர் தீவனமும் 2 கிலோ அடர் தீவனமும் அதனுடன் 30 கிராம் தாது உப்புக் கலவையை கலந்து கொடுக்க வேண்டும்.

மேலும் பசுந்தீவனம் அதிகம் கொடுக்க வேண்டும் இதில் கால்நடைகளின் கருப்பை மற்றும் பிறப்புறுப்பில் திசுக்களில் நஞ்சுக்கொடி ஆகியவற்றின் ஆரோக்கியம் மற்றும் முதிர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories