மாடித் தோட்டங்களுக்கு எ ப்படி உரம் தயாரிக்கலாம்?

வெண்டை செடியில் ஏன் இலைகள் வெள்ளை நிறமாக மாறுகின்றது? இதை எவ்வாறு தடுக்கலாம்?

வெண்டை செடியில் சத்து குறைபாடு ஏற்பட்டால் இலைகள் வெள்ளையாக மாறிவிடும்.

இதை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் சீமைக்கருவேல இலைச்சாற்றை கலந்து வெண்டை செடியின் மீது தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெண்டை செடி பச்சைபசேல் ஆக வளரும்.

சுக்கு அஸ்திரம் தயாரிப்பது எப்படி ?எத்தனை நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்?

சுக்கு அஸ்திரம் கலவையை தயார் செய்த ஒரு நாளைக்கு பிறகு பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்த கலவையை 21 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 50 லிட்டர் தண்ணீர் மற்றும் 250 மில்லி சுக்கி அஸ்திரம் கலந்து வயலில் தெளிப்பதால் பூன்சனா நோய்களை கட்டுப்படுத்தலாம்.

தென்னையில் காய் பிடிக்காமல் போவதற்கு ஏதாவது பூச்சிகள் காரணமாகுமா?

வெள்ளை ஈ தென்னை மரத்தின் பச்சையத்தை உறிஞ்சி தென்னையில் காய்ப்பு இல்லாமல் செய்துவிடும்.

இந்த வெள்ளை ஈ தென்னையில் ஓலைகளில் அடிப்பகுதியில் இருக்கும் .மேலும் இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த மரங்களை தாக்குகின்றன.

மாடித் தோட்டங்களுக்கு எ ப்படி உரம் தயாரிக்கலாம்?

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம்.

வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள், டீ தூள், முட்டை ஓடுகள் போன்றவற்றையும் மண் தொட்டிகளில் நிரப்பி நன்கு மட்க செய்து உரமாக்கலாம்.

மாடுகள் சினை பருவத்திற்கு எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வரும்?

பசுமாடு 17 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையும், எருமை மாடு 20 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறையும் பருவத்திற்கு வரும்.

மாடுகளின் இந்த சினை தருணத்தை தவறவிடாமல் பருவத்தின் அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டு கருவூட்டல் செய்ய வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories