மாடித் தோட்டம் அமைக்க நாற்றுகளை இப்படிதான் தயார் செய்யணும்..

மாடித் தோட்டம் அமைக்க தேவையான நாற்றுகளை தயார் செய்யும் முறை..

** கத்திரிக்காய், தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளின் விதைகளை நேரடியாக ஊன்றக் கூடாது.

** மாடித்தோட்டத்தின் ஓர் ஓரத்தில், மூன்றடி அகலம், ஆறு அடி நீளம், அரையடி உயரத்தில் மண்ணைக் கொட்டி மேட்டுப்பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும்.

** அந்த பாத்திகளில் கல், குப்பைகள் இல்லாமல் சுத்தமாக்கி, சமமாக மட்டப்படுத்த வேண்டும்.

** பாத்திகளில் குச்சியால் கோடு போடுவது போல கீறி, அந்தக் கோட்டில் காய்கறி விதைகளைத் தூவி, கைகளால் லேசாக மண்ணைத் தள்ளி விதைகளை மூடி, பூவாளி மூலமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்.

** 20 முதல் 25 நாட்களுக்குள் நாற்றுகள் வளர்ந்துவிடும். அந்த நாற்றுகளை தொட்டிகளில் எடுத்து நடவு செய்ய வேண்டும்.

** கீரைகளை விதைப்பதற்கும் இதுபோன்ற மேட்டுப்பாத்திகள்தான் சிறந்தது.

** பொன்னாங்கண்ணி, புதினா போன்ற கீரைகளுக்கு விதை தேவையில்லை; சமையலுக்கு வாங்கும் கீரைகளின் தண்டுகளை நட்டுவைத்தாலே போதுமானது.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories