மாடித் தோட்டம் அமைக்க போகிறீர்களா? இதுதான் சரியான மாதம்!

ஜூன், ஜூலை மாடித் தோட்டம் அமைக்க சரியான மாதம். கோடைகாலத்தில் எக்காரணம் கொண்டும் விதைகள் நடவு செய்யக் கூடாது.

அதன்பின்னர் அக்டோபர் நவம்பர் மாதங்களிலும் நடலாம் அதன் பிறகு குளிர்கால காய்கறிகளான பீட்ரூட் அண்ணாச்சி, முட்டைகோஸ் ,கேரட் ஆகியவற்றை அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய வேண்டும்.

மக்காச்சோளத்தில் இலை வெள்ளை நோய் வராமல் எப்படி தடுக்கலாம்?

உயிரி உரங்கள் அல்லது ஆடூடத்தில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு ரகங்களான co எம் 5 இன்டிமிட் 345 இஹச் 43861 , கேஹ 526 ஏஹ- 36 போன்ற ரகங்களை பயிரிடுவதால் வெள்ளை நோயை தடுக்கலாம்.

தேக்கு மரத்தை எப்பொழுது கலைத்துவிட வேண்டும்?

முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது முலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும் இதனால் மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளரும்.

பயிருக்கு ஏற்ற பட்டம் என்றால் என்ன?

ஒருவருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலையில் காற்றோட்ட நிலை இருக்கும் போது அதிக மகசூலை அது கொடுக்கும் அதுவே அந்த பெயருக்கு ஏற்ற பட்டம் ஆகும் .

பட்டத்தை சம்பா, குறுவை ,நவரை ,கார்,தாளாடி , சொர்ணவாரி, முன் சம்பா ,பின் சம்பா சித்திரைப்பட்டம் ஆடிப்பட்டம் ,கார்த்திகைப் பட்டம் என பல விதமாக நமது முன்னோர்கள் பிரித்துள்ளார்கள்.

சினை மாட்டிற்கு பசுந்தீவனம் எப்படி கொடுப்பது ?
சினை மாட்டிற்கு 25 கிலோ பசுந்தீவனத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அளிக்க வேண்டும்.

கலப்பு தீவனம் தினம் 8 வது மாத சினையில் தினமும் ஒன்று முதல் ஒன்றரை கிலோ வீதமும் 9 வது மாதம் ஒன்றரை முதல் 2 கிலோ வீதமும் கன்று ஈனும் வரை வழங்க வேண்டும்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories