மாடி தோட்டத்தில் ரோஜா மலர் தாவரம் சிறப்பாக வளர சில ஆலோசனைகள்:

மாடி தோட்டத்தில் ரோஜா மலர் தாவரம் சிறப்பாக வளர சில ஆலோசனைகள்:

1. நமது ஊர் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை பொறுத்து குறைந்த அளவு தண்ணீரை தேவையான இடைவெளியில் மட்டும் கொடுக்கலாம் தொடர்ந்து தினசரி தண்ணீர் தருவதை தவிர்க்கவும்.

2. மக்கிய தொழு உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் அல்லது ஊட்டமேற்றிய மண்புழு உரத்தை வாரம் மாதம் முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து விரல்களில் அள்ளும் அளவு அல்லது ஒரு கைப்பிடி அளவிற்கு பைகளில் தூளாக்கி தூவி விடலாம்.

3. தினசரி சமையலறைக் கழிவுகளில் முக்கியமாக முட்டை ஓடு நன்கு தூளாக்கி 10 நாட்களுக்கு ஒரு முறை ஒரு தொட்டிக்கு 3 முட்டை முதல் 4 முட்டை ஓடுகளை தூவலாம்.

4. சுத்தப்படுத்தப்பட்ட வெங்காயத்தாள் பூண்டு தோல் போன்றவற்றை பைகளில் அழுத்தி வைத்து விடுவது நல்லது. 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

5. இஎம் கரைசல் அல்லது பழ இ. எம் கரைசல் அல்லது பஞ்சகாவிய அல்லது தேமோர் கரைசல் அல்லது அரப்பு மோர் கரைசல் போன்ற திரவங்களை தொடர்ச்சியாக ஒரு லிட்டருக்கு 25 மில்லி என்ற கணக்கில் கலந்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை உள்ள இடைவெளியில் தெளிக்கலாம்.

6. ரோஜா செடியில் சம்பந்தமில்லாமல் வளரும் ஒற்றைக் கொம்பு வளரும் அந்த குச்சியை நீக்கிவிடலாம்.

7. ரோஜா செடியில் வளரும் படுக்கை வசமாக வளரும் குச்சிகள் மற்றும் காய்ந்த கிளைகளை அல்லது இடமில்லாத கிளைகளை வெட்டி விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடம் ஒரு முறை கவாத்து செய்வது மலர் சாகுபடியில் அதிக பலன் தரும்.

8. தாவரங்களுக்கு நுண்ணூட்டச்சத்து கொடுப்பதற்காக முருங்கை இலை சாறு தெளிப்பது நிலக்கடலை சாரி தெளிப்பது போன்றவை நல்ல பலன் தரும்.

9. ஹியூமிக் அமிலம் மற்றும் கடல்பாசி உரத்தை பயன்படுத்துவதும் நல்லது.

10. மாதம் ஒருமுறை ஒரு தொட்டிக்கு 5 மில்லி சூடோமோனஸ் என்ற திரவத்தை பாசன நீருடன் கலந்து வேர்ப்பகுதியில் ஊட்டலாம்.

11. பயிர்களில் வரும் மக்னீசியம் சத்து குறைபாடு தீர்க்க பஞ்சகாவியா தெளிப்பது அல்லது இருக்கு கரைசல் தெளித்து கொடுப்பது நல்லது.

12. காய்ந்த இலை தழைகளை நன்கு தூளாக்கி அதனை மூடாக்காக செடிகளை சுற்றி மண்ணில் இருக்குமாறும் செடியைத் தொடரும் போட்டு விடுவது நல்லது.

13. 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது தேவையைப் பொறுத்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி கலந்து இலைகளின் முன்னும் பின்னும் படுமாறு மாலை வேளையில் தெளித்து விடுவது நல்லது.

14. பொதுவாக அடுப்பு சாம்பல் அல்லது செங்கல் சூளை சாம்பல் கிடைத்தால், மாதம் ஒருமுறை ஐந்து விரல்களில் அள்ளும் அளவு அல்லது 20 கிராம் அளவுள்ள சாம்பலை கைகளின் மேல் பாசனத்துடன் தூவி விடலாம்.

15. ரோஜா மலர் சாகுபடியின் இலக்கு அந்த ரகத்திற்கு ஏற்ற பூக்களின் அகலம் கிடைப்பதும் அதிக மக்கள் கொண்ட திடமான தன்மையுள்ள இதழ்களும் நல்ல நறுமணமும் ஆகும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories