தேவையான பொருட்கள்
grow bags அல்லது தொட்டு தொட்டி
அடி உரமாக இட மணல் ,தென்னைநார் கழிவு ,மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவியம்,வே ப்பம் தூள்.
வேர்கள்
பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தேர்வு செய்த பைகளில் அல்லது தொட்டி அடியுரமாக மண் இயற்கை உரம் தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை சம அளவு கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
பைகளில் உரங்களை நிரப்பும் பொழுது ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
வேர்களை தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும் .அதன் வேர்ப் பகுதிகள் அல்லது கணுக்கால் முழுவதும் மறையும்படி ஊ ன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
வேர்களை ஊ ன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார் கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தில் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
பைகளை உபயோகப்படுத்தினால் அதன் அடியில் இரு துளைகள் இடவேண்டும். ஏனெனில் அதிகப்படியான தண்ணீர் இருந்த துளை வெளியே வெளியேறிவிடும்.
உரங்கள்
சமையல் சமையலறை கழிவுகளை மக்க செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
தண்ணீருடன் பஞ்சகாவ்யாவை கலந்து ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க பிரண்டை, சோற்றுக்கற்றாழை, நொச்சி ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் தண்ணீருக்கு 3oo மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
ஒரு வளரும் கிளையிலிருந்து வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வேரிலிருந்து மறுபடியும் தழைத்து வளர ஏதுவாக இருக்கும்.