வீட்டு தோட்ட பயிர்கள்
வீட்டுத்தோட்டத்தின் அருகில் இருக்கும் இடங்களில் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.
ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.
பலவருட பயிர்கள் தொடர்ந்து பயன் தரும். அவை
முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.
இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை -கீழே கொடுக்க பட்டுள்ளவை மலைப்பகுதிகளுக்கானது அல்ல .
1. தக்காளி மற்றும் வெங்காயம் – ஜுன் – செப்டம்பர்
முள்ளங்கி – அக்டோபர் – நவம்பர்
பீன்ஸ் – டிசம்பர் – பிப்ரவரி
வெண்டைக்காய் – மார்ச் – மே
2. கத்தரி – ஜுன் – செப்டம்பர்
பீன்ஸ் – அக்டோபர் – நவம்பர்
தக்காளி – ஜுன் – செப்டம்பர்
தண்டுகீரை, சிறுகீரை – மே
3. மிளகாய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – செப்டம்பர்
தட்டவரை / காராமணி – டிசம்பர் – பிப்ரவரி
பெல்லாரி வெங்காயம் – மார்ச் – மே
4.வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி – ஜுன் – ஆகஸ்டு
முட்டைக்கோஸ் – செப்டம்பர் – டிசம்பர்
கொத்தவரை – ஜனவரி – மார்ச்
5 .பெரிய வெங்காயம் – ஜுன் – ஆகஸ்டு
பீட்ருட் – செப்டம்பர் – நவம்பர்
தக்காளி – டிசம்பர் – மார்ச்
வெங்காயம் – ஏப்ரல் – மே
06.கொத்தவரை – ஜுன் – செப்டம்பர்
கத்தரி மற்றும் பீட்ருட் – அக்டோபர் – ஜனவரி
07.பெரிய வெங்காயம் – ஜுலை – ஆகஸ்டு
கேரட் -செப்டம்பர் – டிசம்பர்
பூசணி -ஜனவரி – மார்ச்
08. மொச்சை, அவரை – ஜுன் – ஆகஸ்டு
வெங்காயம் – ஜனவரி – ஆகஸ்டு
வெண்டைக்காய் – செப்டம்பர் – டிசம்பர்
கொத்தமல்லி – ஏப்ரல் – மே