இன்றைய விவசாய பழமொழி !

“மாடு மேய்க்காமல் கெட்டது பயிர் பார்க்காமல் கெட்டது “

விவசாயத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே நாம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் விவசாயத்தில் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து இன்றைய பழமொழியில் காணலாம்.

திவ்யன் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் அவன் சொந்த ஊர் விழுப்புரம் அவனது தந்தையின் விவசாயம் செய்பவர் அவர் அனுபவம் நிறைந்த விவசாயி . திவ்யன் ஒரு முறை விவசாயம் செய்வது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என்று தன் தந்தையிடம் கேட்டான்.

அதற்கு அவனது தந்தை விவசாயத்தின் பராமரிப்பு முறைகளை பற்றி எழுது என்றார். உடனே அதைப் பற்றி சொல்லுங்கள் அப்பா என்றான்.

அதற்கு அவனது தந்தை விவசாயம் செய்ய அனுபவமும் இருப்பதுடன் ஆர்வமும் இருக்க வேண்டும் அப்போதுதான் விவசாய முழுமையடையும். உதாரணமாக “மாடு மேய்க்காமல் கெ ட்டது பயிர் பார்க்காமல் கேட்டது” எனலாம் என்றார்.

அதற்கு அவனுடைய தந்தை நாம் மாடு வளர்த்தாலும் விவசாயம் செய்தாலும் அதனை முறையாக கவனிக்க வேண்டும். ஏனோதானோவென்று பராமரிப்பு செய்யக்கூடாது அதன் மூலம் லாபம் பெறுவது கடினம் இதைத்தான் மாடு என்ற வரியும் அதிக கவனமும் விவசாய பயிர்களை கவனிக்கவேண்டும் ஏதேனும் பூச்சி தாக்குதல் உள்ளதா? நோய் ஏதேனும் உள்ளதா? என பார்க்க வேண்டும். இவ்வாறு பார்க்காமல் விட்டுவிட்டால் நல்ல விளைச்சல் மற்றும் லாபம் பெற முடியாது என்பதனை பயிர் பார்க்காமல் கெட்டது என்ற வரியில் தெளிவுபடுத்துகிறது என்றார்.

அதற்கு திவ்யன் மாடு மற்றும் விவசாயத்தின் பராமரிப்பு பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் என்றான்.

அதற்கு அவனுடைய அப்பா மாடுகளை பராமரிப்பது என்பது மிக முக்கியமான செயல் அவற்றுள் சில மாடுகளை பராமரிப்பது கன்று பராமரிப்பது கறவை மாடுகள் பராமரிப்பது என வகைப்படுத்தலாம்.

சினை மாடுகளை நன்கு பராமரித்தால் தான் கருப்பையில் வளரும் கன்று என்று திடமாக இருக்கும் 3/2 வளர்ச்சியில் கடைசி 3 மாதங்களில் தான் ஏற்படுகிறது ஏழு மாதம் சினை முடிந்ததும் பால் கறப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் பசுக்களிடம் இருந்து பிரித்து வைக்கவேண்டும் கன்று ஈனுவதற்கு 15 முதல் 30 நாட்களுக்கு முன்னரே மேய்ச்சலுக்கு அனுப்புவது நிறுத்த வேண்டும் தினமும் மடியைப் பிடித்து விட வேண்டும் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும்.

கறவை மாடுகளை முழுமையாக பராமரிப்பதால் 10 ஆண்டுகள் வரை நல்ல கறவைகளை பெறலாம்.

இதுபோல விவசாயத்திலும் ஆரம்பம் முதல் முடிவு வரை அதாவது பருவம் பட்டம் விதைப்பு நீர் மேலாண்மை உர மேலாண்மை களை மேலாண்மை பூச்சி மேலாண்மை மற்றும் அறுவடை சேமிப்பு ஆகிய ஒவ்வொரு செயலிலும் கவனமாக பார்க்கவேண்டும்.

மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய இரண்டிலும் “மாடு மேய்க்காமல் கெட்டது பயிர் பார்க்காமல் கெட்டது” என்ற பழமொழியை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories